குடியரசு தின அணிவகுப்பு.. ஐரோப்பிய ஒன்றிய படைப்பிரிவு பங்கேற்பு..
Republic Day 2026: குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினர்களாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வருகை தரும் சூழலுடன் இணைந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 23, 2026: இந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் ஐரோப்பிய ஒன்றிய (European Union) படைப்பிரிவு பங்கேற்க உள்ளது. இது தேசிய விழாவில் குறிப்பிடத்தக்க சர்வதேச பங்கேற்பாக அமையவுள்ளது. அணிவகுப்பின் ஒரு பகுதியாக, இரண்டு ஜிப்சி வாகனங்களில் பயணிக்கும் நான்கு ஐரோப்பிய ஒன்றியக் கொடி ஏந்தியவர்கள் பேரணி பாதை முழுவதும் march past-ல் கலந்து கொள்வார்கள். இந்தப் பங்கேற்பு, குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினர்களாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வருகை தரும் சூழலுடன் இணைந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களின் வருகை, வர்த்தகம், தொழில்நுட்பம், காலநிலை நடவடிக்கை மற்றும் புவியியல் அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா–ஐரோப்பா உறவுகள் விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது.
மேலும் படிக்க: பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.95,000-க்கு விற்பனை செய்த தாய்.. 24 மணி நேரத்திற்குள்ளாகவே மீட்ட போலீஸ்!
குடியரசு தினத்தின் கருப்பொருள்:
இந்த ஆண்டின் குடியரசு தின கருப்பொருள் “வந்தே மாதரம்” ஆகும். பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் இந்த கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் குடிமக்களை மீண்டும் இணைப்பதுடன், பல தசாப்தங்களாக நாட்டின் பயணம் மற்றும் முன்னேற்றத்தையும் இது வெளிப்படுத்துகிறது. 1920-களில் “வந்தே மாதரம்” பாடலுக்கான விளக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்கள் கர்த்தவ்ய பாதையில் காட்சிப்படுத்தப்படும்.
ஜனவரி 19 முதல் 26 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள் நாடு முழுவதும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன. அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்கள், மலர் அலங்காரங்கள் மற்றும் அட்டவணை ஊர்திகள் (tableaux) அனைத்திலும் “வந்தே மாதரம்” கருப்பொருள் பிரதிபலிக்கப்படும்.
மேலும் படிக்க: மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: முதல் கட்டத்தில் கேட்கப்படும் 33 கேள்விகள்.. என்னென்ன தெரியுமா?
குடியரசு தின அணிவகுப்பு:
குடியரசு தினம் 2026 அணிவகுப்பில் பல புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இந்திய இராணுவம் ஒருங்கிணைந்த படை இயக்கங்களை வெளிப்படுத்தும் ‘Battle Array Formation’-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதில் டாங்குகள், ஏவுகணை அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் கவச வாகனங்கள் இடம்பெறும். இந்திய விமானப்படையின் flypast நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பல்வேறு வடிவமைப்புகளில் பறக்க உள்ளன.
விமானப்படை முன்னாள் வீரர்களை கௌரவிக்கும் சிறப்பு அட்டவணை ஊர்தியும் இடம்பெற உள்ளது. மேலும், பார்வையாளர்களின் அனுபவத்தையும் தெளிவான காட்சியையும் மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சி வரிசையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.