பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.95,000-க்கு விற்பனை செய்த தாய்.. 24 மணி நேரத்திற்குள்ளாகவே மீட்ட போலீஸ்!
Infant Sold For 95000 Rupees In Uttar Pradesh | உத்தர பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை ரூ.95,000-க்கு விற்பனை செய்த நிலையில், 24 மணி நேரத்திற்குள்ளாகவே போலீசார் குழந்தையை அதிரடியாக மீட்டுள்ளனர்.
லக்னோ, ஜனவரி 23 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கோசாம்பி மாவட்டம், ஹரானா கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவருக்கு திருமணமாகி மம்தா தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், மம்தா தனது பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த நிலையில், 24 மணி நேரத்திற்குள்ளாக போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.95,000-க்கு குழந்தையை விற்பனை செய்த தாய்
தங்களது 6 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மம்தா ஜனவரி 21, 2026 அன்று வெறும் ரூ.95,000-க்கு அனிதா என்ற பெண்ணிடம் விற்பனை செய்துள்ளார். அவர் தனது கணவருக்கு தெரியாமல் இந்த கொடூர செயலை செய்துள்ளார். அது குறித்து அறிந்த பிரிஜேஷ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது பச்சிளம் குழந்தையை தனது மனைவி ரூ.95,000-க்கு விற்பனை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : உலகில் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல்.. டாப் 5ல் இந்திய நகரங்கள்
24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்
பிரிஜேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாசரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே போலீசார் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மம்தா தேவி மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : டயர் வெடித்து பெரும் விபத்து.. லாரி மீது மோதிய பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு
பணத்துக்காக பெற்ற தாயே தனது 6 மாத பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.