Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: முதல் கட்டத்தில் கேட்கப்படும் 33 கேள்விகள்.. என்னென்ன தெரியுமா?

Caste Census 2027: சாதி கணக்கெடுப்பு என்பது, நாட்டின் மக்கள்தொகையில் உள்ள பல்வேறு சாதிகள், சமூகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சமூக-பொருளாதார நிலை குறித்து முழுமையான தரவுகளை சேகரிக்கும் ஒரு கணக்கெடுப்பு முறையாகும். இந்தியாவில் 1931 ஆம் ஆண்டு கடைசியாக முழுமையான சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: முதல் கட்டத்தில் கேட்கப்படும் 33 கேள்விகள்.. என்னென்ன தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jan 2026 10:33 AM IST

ஜனவரி 23, 2026: மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு – ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 வரை நடக்கும். மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு (PE) – பிப்ரவரி 2027ல் நடக்கும். 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கேள்விப் பட்டியல்:

  1. கட்டிட எண் (நகராட்சி / உள்ளாட்சி அமைப்பு / மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்)

  2. கணக்கெடுப்பு வீட்டு எண்

  3. கணக்கெடுப்பு வீட்டின் தரையின் பிரதானப் பொருள்

  4. கணக்கெடுப்பு வீட்டின் சுவரின் பிரதானப் பொருள்

  5. கணக்கெடுப்பு வீட்டின் கூரையின் பிரதானப் பொருள்

  6. கணக்கெடுப்பு வீட்டின் பயன்பாடு

  7. கணக்கெடுப்பு வீட்டின் நிலை

  8. குடும்ப எண்

  9. அந்தக் குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் மொத்த நபர்கள் எண்ணிக்கை

  10. குடும்பத் தலைவர் பெயர்

  11. குடும்பத் தலைவர் பாலினம்

  12. குடும்பத் தலைவர் பட்டியலிடப்பட்ட சாதி / பட்டியலிடப்பட்ட பழங்குடி / பிற பிரிவைச் சேர்ந்தவரா

  13. கணக்கெடுப்பு வீட்டின் உரிமை நிலை

  14. குடும்பம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை

  15. குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

  16. குடிநீரின் முக்கிய ஆதாரம்

  17. குடிநீர் ஆதாரம் கிடைக்கும் நிலை

  18. ஒளிவிளக்கின் முக்கிய ஆதாரம்

  19. கழிப்பறை வசதி உள்ளதா

  20. கழிப்பறையின் வகை

  21. கழிவுநீர் வெளியேற்ற முறை

  22. குளியலறை வசதி உள்ளதா

  23. சமையலறை மற்றும் LPG / PNG இணைப்பு உள்ளதா

  24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்

  25. ரேடியோ / டிரான்சிஸ்டர்

  26. தொலைக்காட்சி

  27. இணைய வசதி

  28. லேப்டாப் / கணினி

  29. தொலைபேசி / கைப்பேசி / ஸ்மார்ட்போன்

  30. மிதிவண்டி / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மோபெட்

  31. கார் / ஜீப் / வேன்

  32. குடும்பத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கிய தானியம்

  33. மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கைப்பேசி எண்

மேலும் படிக்க: மூடப்படாத ரயில்வே கேட்… திடீரென ரயிலின் குறுக்கே வந்த லாரி – பரபரப்பு சம்பவம்

இரண்டாம் கட்டமான மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு (Population Enumeration) தொடர்பான கேள்வித்தாள் பின்னர் அறிவிக்கப்படும்.