சென்னை தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் அனுமதி…அடையாள அட்டை கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

Chennai Tolkappiyar Park: சென்னையில் உள்ள தொல்காப்பியல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்கள் அனுமதிக்கான எண்ணிக்கை உயர்த்தப்பட்டதுடன், அதற்கான அடையாள அட்டைகள் பெறுவதற்கான கட்டணமும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் அனுமதி...அடையாள அட்டை கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

தொல்காப்பிய பூங்காவில் அடையாள அட்டைக்கு 50 சதவீத கட்டண் குறைப்பு

Updated On: 

23 Jan 2026 10:15 AM

 IST

சென்னை அடையார் முகத்துவாரப் பகுதியில் தொல்காப்பியர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் தொல்காப்பியர் பூங்கா புதுப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொல்காப்பியர் பூங்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட சுமார் 500 பேர் அளவிலான பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், தொல்காப்பியர் பூங்காவில் பிப்ரவரி 1- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சுமார் 3000 பேர் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

பொது மக்களுக்கு 3 வண்ணங்களில் அடையாள அட்டை

இந்தப் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த அட்டைகளை பெற்ற பொதுமக்கள் வாரத்தில் 3 முறை நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு ஒரு நபருக்கு ரூ.500-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.250- ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல, 3 மாதங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு ரூ.1,500- ஆக இருந்த கட்டணம் ரூ. 750- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!

ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக கட்டணம் குறைப்பு

இதே போல, 6 மாதங்களுக்கு நடை பயிற்சி மேற்கொள்வதற்கு ரூ. 2500- ஆக இருந்த கட்டணம் ரூ. 1200- ஆகவும், ஒரு ஆண்டுக்கு ரூ. 5000- ஆக இருந்த கட்டணம் ரூ. 2,500- ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அமர்விலும் 300 பேர் மட்டுமே தொல்காப்பியப் பூங்காவுக்குள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்பட உள்ளனர். இதற்கான நுழைவு சீட்டு முன்பதிவு மற்றும் பல்வேறு சந்தேகங்களுக்கு www.crrt.tn.gov.in- என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்தது.

நாளுக்கு இரு வேளைகளில் நடைபயிற்சிக்கு அனுமதி

இந்த பூங்காவில் தினந்தோறும் காலை 6:30 முதல் 8:00 மணி வரையும், மாலை 4.30 முதல் 6 மணி வரையும் பொதுமக்கள் நடை பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதை தவிர்த்து சுற்றுச்சூழல் கல்வி நிறுவனங்கள் மூலம் நடைபெறும் சுற்றுச்சூழல் கல்வியில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவிகள் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை அனுமதிக்கப்படுகிறார்கள். ஆரம்பத்தில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, நடை பயிற்சி மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் அதிகமாக இருந்ததால் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் பொது மக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை முதல் குமரி வரை.. 57 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..