Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை முதல் குமரி வரை.. 57 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

Additional stops for 57 express trains: சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12633) கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில் (12694) தூத்துக்குடி மேலூரிலும் நின்று செல்லும். ரயில் நிலையங்களில் இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.

சென்னை முதல் குமரி வரை.. 57 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..
57 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Jan 2026 08:48 AM IST

சென்னை, ஜனவரி 23: சென்னை-ஈரோடு-கன்னியாகுமரி ரயில் உட்பட 57 விரைவு ரயில்களுக்கு தெற்கு ரயில்வே கூடுதல் நிறுத்தங்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாள்தோறும் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் ரயில்களில் பயணிப்பவர்கள் இந்த கூடுதல் நிறுத்தங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளவும். அதோடு, ஜனவரி 26ம் தேதி முதல் விரைவு ரயில்கள் இந்த கூடுதல் நிறுத்தங்களில் நின்று செல்ல உள்ளது. அதன் விரிவான விவரங்களை அறியவும்.

மேலும் படிக்க: குடியரசு தின தொடர் விடுமுறை…சென்னையில் இருந்து ஊருக்கு போக 800 பேருந்துகள் தயார்…இன்று முதல் இயக்கம்!

சென்னை, குமரி, தூத்துக்குடி:

* சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12633) கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில் (12694) தூத்துக்குடி மேலூரிலும், எழும்பூர்-புதுச்சேரி விரைவு ரயில் (16115) ஓலக்கூரிலும், எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் (16127/16128) இரு திசைகளிலும் அம்பலப்புழாவிலும், எழும்பூர்-மன்னார்குடி மன்னை விரைவு ரயில் (16179/16180) இரு திசைகளிலும் திருப்பாதிரிப்புலியூரிலும், எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில் (16865) வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்திலும், எழும்பூர்-சத்ரபதி சிவாஜி மகாராஜ் விரைவு ரயில் (22158) அரக்கோணத்திலும், எழும்பூர்-திருச்சி விரைவு ரயில் (22675) திருவெறும்பூரிலும் இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களுடன் நின்று செல்லும்.

கோவை, பெங்களூரு, பாலக்காடு:

* கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் ரயில் (12676) திருவள்ளூரிலும், மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரயில் (12686) பெரம்பூரிலும், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் ரயில் (12696) பெரம்பூரிலும், சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் (16089) அம்பத்தூரிலும், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு டபுள் டக்கர் ரயில் (22625/22626) இரு திசைகளிலும் திருவள்ளூரிலும், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு ரயில் (22651/22652) இரு திசைகளிலும் கொல்லங்கோடு ரயில் நிலையத்திலும் இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களுடன் நின்று செல்லும்.

அகமதாபாத், பிட்ரகுண்டா:

* பிட்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் ரயில் (17237) பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் ரயில் நிலையங்களிலும், சென்னை சென்ட்ரல்-பிட்ரகுண்டா ரயில் (17238) விம்கோ நகர் ரயில் நிலையத்திலும் இந்த மாதம் 27-ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும். மேலும், அகமதாபாத்-சென்னை சென்ட்ரல் ரயில் (22920) அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் பெறும்.

ராமேஸ்வரம், காரைக்கால், சிதம்பரம்:

* தாம்பரம்-ராமேஸ்வரம் ரயில் (16103/16104) இரு திசைகளிலும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும். மேலும், தாம்பரம்-காரைக்கால் ரயில் (16175/16176) இரு திசைகளிலும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தம் பெறும்.

மேலும் படிக்க: Republic Day 2026: குடியரசு தினம் என்றால் என்ன..? இந்த நாள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏன் முக்கியம்?

செங்கோட்டை, சிவகங்கை, நாகர்கோவில்:

* தாம்பரம்-செங்கோட்டை ரயில் (20683/20684) இரு திசைகளிலும் செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் இந்த மாதம் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் இருந்து கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும். மேலும், தாம்பரம்-நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் (20691/20692) இரு திசைகளிலும் மணப்பாறை, திருமங்கலம் மற்றும் நாங்குநேரி ரயில் நிலையங்களில் இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய ரயில்கள் உட்பட மொத்தம் 57 ரயில்கள் மூலம் இயக்கப்படும் 109 ரயில் சேவைகளுக்குக் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.