சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

Chennai Crime News : சென்னை திருவல்லிக்கேணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் நாகமுத்து என்பவர் மெரினா கடற்கரையில் பிரபலமான சுந்தரி அக்கா கடையின் உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்தது. இவர் வாட்ஸப் குழு மூலம் பணம் வைத்து சூதாடும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுந்தரி அக்கா மகன் கைது

Updated On: 

14 Sep 2025 07:50 AM

 IST

சென்னை, செப்டம்பர் 14 : சென்னை திருவல்லிக்கேணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், குக்வித் கோமாளி போட்டியாளர் சுந்தரி அக்காவின் மகனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதாகி உள்ளார். கைதானவர்களில் நாகமுத்து (40) என்பவர் மெரினா கடற்கரையில் பிரபலமான சுந்தரி அக்கா கடையின் உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்தது.  ஆன்லைன் சூதாட்டம் ஒருபக்கம் இருந்தாலும், பணம் வைத்து சீட்டுக் கட்டு விளையாடுவது இன்னும் நடந்து வருகிறது. குறிப்பாக,சென்னையில் சூதாட்டம் பெரும் அளவில் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனால், போலீசார் சந்தேக்கத்திற்குரிய இடங்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தி.நகர், திருவல்லிக்கேணி, எழும்பூர் போன்ற பகுதிகளில் சூதாட்டம் நடந்து வருகிறது.

சூதாட்டத்தை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விதியில் பணம் வைத்து சீட்டுக் கட்டு விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார், அப்பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Also Read : திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்.. கைது செய்த போலீஸ்!

சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தரி அக்காவின் மகன் கைது

அப்போது, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ல லாட்ஜில் கும்பல் ஒன்று பணத்தை வைத்து சீட்டுக் கட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து, அந்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புகார்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாகவும் போலீசார் கூறினர். கைதானவர்கள் திருவல்லிக்கேணி, ராயபுரம், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், கைதானவர்கள் நாகமுத்து (36), முகிலன் (40), வேதகிரி (47), ராஜேந்திர பிரசாத் (48), சுதிர்பாபு (33), பெரோஷ்கான் (50), அந்தோணி (25), வினோத் (40), முருகன் (42), ஜெயபிரகாஷ் (40), பலராம கிருஷ்ணமூர்த்தி (30) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Also Read : செல்போன் வேண்டும் என்றால் முத்தம் கொடு.. பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்!

இதில், நாகமுத்து என்பவர் பிரபல நிகழ்ச்சியான குக்வித் கோமாளியில் பங்கேற்ற சுந்தரி அக்காவின் மகன் என தெரியவந்தது. கைதானவர்களின் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சுந்தரி அக்காவின் மகன் நாகமுத்து வாட்ஸப் குழு மூலம் பணம் வைத்து சூதாடும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது மீன் குழம்பால் சென்னை மெரினாவில் பிரபலமானவர் சுதந்தரி அக்கா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராய் களமிறங்கி, சின்னத்திரை பிரபலமாக ஆரம்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.