சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடத்தில்? முழு விவரம் இதோ!

Chennai AC Electric Buses : சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.233 கோடியில் 55 புதிய தாழ்தள மின்சார ஏசி பேருந்துகள் மற்றும் 80 சாதாரண புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடத்தில்? முழு விவரம் இதோ!

ஏசி பேருந்துகள்

Updated On: 

12 Aug 2025 09:34 AM

சென்னை, ஆகஸ்ட் 12 :  சென்னையில் ரூ.233 கோடியில் 55 ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, 135 மின்சார பேருந்துகளின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.  அண்மையில் கூட, மாற்றுத்திறனாளிகளுக்காக தாழ்தள பேருந்துகள், மின்சாரப் பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படியே, 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி (நேற்று)  ஏசி மின்சார பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. இது  பயணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், மின்சார பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 120 மின்சார பேருந்துகளின் சேவை 2025 ஜூன் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.233 கோடியில் 55 புதிய தாழ்தள மின்சார ஏசி பேருந்துகள் மற்றும் 80 சாதாரண புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்தொடர்ந்து, ரூ.49 கோடியில் பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையும் திறந்து வைத்தார்.

Also Read : தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

எந்தெந்த வழித்தடத்தில் ஏசி மின்சார பேருந்துகள்?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்திருவான்மியூர் செல்லும் வழித்தடத்தில் 10 சாதாரண பேருந்துகளும், 5 குளிர்சாத பேருந்துகளும், கிளாம்பாக்கம்சோழிங்கநல்லூர் வழித்தடம், தி.நகர்திருப்போரூர் வழித்தடம், பிராட்வேமெரினா கடற்கரைகேளம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடத்தில் தலா ஐந்து சாதாரண பேருந்துகள் மற்றும் ஐந்து குளிர்சாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மேலும், சென்னை விமான நிலையம் – சிறுசேரி வழித்தடத்தில் 15 ஏசி மின்சார பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையம் – கேளம்பாக்கம் வழித்தடம், கோயம்பேடு – சிறுசேரி ஐடி பார்க் வழித்தடத்தில் தலா 5 சாதாரண பேருந்துகளும், 20 குளிர்சாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Also Read : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு

திருவான்மியூர்சிறுசேரி ஐடி பூங்கா வழித்தடத்தில் 5 சாதாரண பேருந்துகளும், அடையாறு பேருந்து நிலையம்தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் 5 சாதாரண பேருந்துகள், பிராட்வேபெரும்பாக்கம் வழித்தடத்தில் 10 சாதாரண பேருந்துகளும், தாம்பரம் மேற்குசோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 10 பேருந்துகளும் இயக்கப்படுகிறதுஏசி மின்சார பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.15 முதல் அதிகபட்சம் ரூ.80 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதாந்திர பயணச்சீட்டுக்காக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.