AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கொட்டும் மழை.. எந்த ஊரில் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் – 41.5°C, திருச்சி – 40.1°C, மதுரை – 40.2°C, கரூர் – 40.2°C பதிவாகியுள்ளது. மேலும், திருத்தணி – 39.5°C, திருப்பத்தூர் – 38.5°C, ஈரோடு – 39.6°C, தர்மபுரி – 39°C பதிவாகியுள்ளது. சென்னை நகரில் மீனம்பாக்கத்தில் 39.3°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35°C பதிவாகியுள்ளது.

ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கொட்டும் மழை.. எந்த ஊரில் எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Apr 2026 14:54 PM IST

வானிலை நிலவரம், ஏப்ரல் 30, 2026: தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 30ஆம் தேதி (இன்று) சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை:

மே 1ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், மே 2ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மே 3ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். மே 6ஆம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: சிறுமி பாலியல் கொலை வழக்கு.. புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

105 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:

இதற்கிடையில், தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் – 41.5°C, திருச்சி – 40.1°C, மதுரை – 40.2°C, கரூர் – 40.2°C பதிவாகியுள்ளது. மேலும், திருத்தணி – 39.5°C, திருப்பத்தூர் – 38.5°C, ஈரோடு – 39.6°C, தர்மபுரி – 39°C பதிவாகியுள்ளது. சென்னை நகரில் மீனம்பாக்கத்தில் 39.3°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35°C பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: நொங்கு பறிக்க முயன்றபோது விபரீதம்.. மின்சாரம் தாக்கி இரு கல்லூரி மாணவர்கள் பலி.. காஞ்சிபுரத்தில் சோகம்!!

அதிக வெயில் – அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை:

வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சில இடங்களில் 2–3°C வரை அதிகரிக்கலாம். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38–39°C மற்றும் குறைந்தபட்சம் 30°C அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us