16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட் இதோ..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, வெப்பநிலையின் தாக்கம் பெரிய அளவில் மாற்றமின்றி தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், நகரின் ஓரிரு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஜூன் 3, 2026: தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4ஆம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஜூன் 3ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் தொடரும் கனமழை:
அதேபோல், ஜூன் 5ஆம் தேதியைப் பொருத்தவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 6ஆம் தேதியைப் பொருத்தவரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
ஜூன் 7ஆம் தேதியைப் பொருத்தவரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 8ஆம் தேதியிலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:
தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தாலும், வட கடலோர தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, வெப்பநிலையின் தாக்கம் பெரிய அளவில் மாற்றமின்றி தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், நகரின் ஓரிரு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.