சென்னையில் மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
Chennai Electric Train Cancellation For Maintenance | சென்னையில், பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளா நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாம்பரம், அக்டோபர் 10 : சென்னை கடற்கரை (Chennai Beach) – செங்கல்பட்டு (Chengalpattu) இடையே இன்று (அக்டோபர் 10, 2026) மின்சார ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே (Southern Railway) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக மின்சார ரயில்கள் உள்ள நிலையில், மின்சார ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து தெற்கு ரயில்வே என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து – தெற்கு ரயில்வே
எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் பணிமனையில் இன்று (அக்டோபர் 10, 2026) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக காலை 11.40 மணி முதல் மதியம் 2.40 மணி வரை மின்சார ரயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி, செங்கப்பட்டில் இருந்து காலை 11.50 மணி, மதியம் 1.05 மணி, மற்றும் 2.5 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில், பகுதி நேரமாக செங்கல்பட்டு – காட்டாங்கொளத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி – முதல்வர் விஜய் கருத்து
செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள்
அதேபோல செங்கல்பட்டில் இருந்து இன்று மதியம் 12.30 மணி மற்றும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 11.28, 12.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக காட்டாங்கொளத்தூர் – செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : நாங்கள் நேருக்கு நேர் தான் பேசுவோம்.. அரசியலில் எடப்பாடி பழனிசாமி காணாமல் போவார்.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனம்!
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள்
சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48, 12,02 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், பகுதி நேரமாக கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.