AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவிரி வழக்கில் அதிரடி உத்தரவு.. தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணை!

Cauvery Water Dispute: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

காவிரி வழக்கில் அதிரடி உத்தரவு.. தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Oct 2026 09:25 AM IST

அக்டோபர், 09: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், பாசனத்தின் முக்கிய ஆதாரமாகவும் விளங்கும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மீண்டும் ஒரு முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குறுவை மற்றும் சம்பா சாகுபடித் தேவைகளுக்காகத் திறக்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவை நிர்ணயம் செய்வதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவி வந்த இழுபறி நிலைக்கு மத்தியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆணையத்தின் உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குக் கர்நாடகா தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கு.. 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செல்லுமா?.. இன்று தீர்ப்பு!!

ஒழுங்காற்றுக் குழு கூட்டம்:

முன்னதாக, காவிரி நீர் பங்கீடு மற்றும் அணைகளின் நீர் இருப்புத் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காகக் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் மாநிலக் கோரிக்கைகளையும் தரவுகளையும் முன்வைத்தனர். அப்போது, தமிழகத்தின் பாசனத் தேவைகளையும் பயிர்களின் நிலையையும் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு அரசு அதிகாரிகள், காவிரியில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உறுதியாகக் கோரிக்கை விடுத்தனர்.

ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை:

எனினும், தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசுத் தரப்பு அதிகாரிகள், தங்களது மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் குடிநீர்த் தேவைகளைக் சுட்டிக்காட்டி, வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரைத் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இரு மாநில அதிகாரிகளின் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையிலான குழு, இடைக்காலத் தீர்வாகத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்குப் பரிந்துரை செய்தது.

இதையும் படிக்க: தமிழக இடைத்தேர்தல் வரலாறு.. 58% வெற்றியைக் கைப்பற்றிய ஆளுங்கட்சிகள்.. உடைக்கப்படுமா பழைய பிம்பம்?

மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவு:

இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 59-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த உயர் மட்டக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு முன்வைத்த பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்றுக் கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குக் காவிரியிலிருந்து தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு முறைப்படி உத்தரவிட்டார்.

Follow Us