AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொது மக்கள் கவனத்திற்கு.. சென்னை அடையாறில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..

Traffic Diversion: மெட்ரோ ரயில் பாதைப் பணிக்காக L.B. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து L.B. சாலை - M.G. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால், 27.06.2026 முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் கவனத்திற்கு.. சென்னை அடையாறில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2026 08:46 AM IST

ஜூன் 27, 2026: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அடையாறு பகுதியில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ஜூன் 27-ஆம் தேதி முதல் அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை அடையாறில் போக்குவரத்து மாற்றம்:

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் பாதைப் பணிக்காக L.B. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து L.B. சாலை – M.G. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால், 27.06.2026 முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் (All Buses & All Heavy Vehicles only), L.B. சாலை – M.G. சாலை சந்திப்பிலிருந்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு, M.G. சாலை, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக L.B. சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

பெசன்ட் நகரிலிருந்து வரும் மக்களுக்கு:

அதேபோல், பெசன்ட் நகரிலிருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலையை அடைந்து வலதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக L.B. சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

L.B. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி 11-வது குறுக்குச் சாலையை அடைந்து, பின்னர் இடதுபுறம் திரும்பி 8-வது குறுக்குச் சாலையை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி 10-வது குறுக்குச் சாலை வழியாக M.G. சாலையை அடைந்து தங்களது இலக்குகளைச் சென்றடையலாம்.

மேலும் படிக்க: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!

இதுவரை சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையிலிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக L.B. சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவிலிருந்து சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வரையிலும் ஒருவழிப் பாதையாக இருந்த சாலை, தற்போது இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

திரு.வி.க பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றம்:

அதேபோல், சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையில் திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் சாலை ஒருவழிப் பாதையாகவும், 11-வது குறுக்குச் சாலையில் திருவான்மியூர் நோக்கிச் செல்லும் சாலை ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் அனைத்தும், L.B. சாலை – M.G. சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூவை அடைந்து, வலதுபுறம் திரும்பி 1-வது பிரதான சாலை வழியாகச் சென்று, பின்னர் வலது மற்றும் இடதுபுறம் திரும்பி 1-வது அவென்யூவை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி L.B. சாலை – Indian Oil பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பை அடைந்து, இடதுபுறம் திரும்பி தங்களது இலக்குகளைச் சென்றடையலாம். இந்திரா நகர் 2-வது அவென்யூவில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us