கட்சியில் சேர்ந்த ஒரே வாரம்… அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.. திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
Anwhar Raajhaa : திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அன்வர் ராஜா இணைந்தால். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால், அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து விலகினார்.

சென்னை, ஆகஸ்ட் 09 : அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு (Anwhar Raajhaa) இலக்கிய அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த பதவியை அன்வர் ராஜாவுக்கு வழங்கி அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து அன்வர் ராஜா விலகினார். கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த ஒரே வாரத்தில், அக்கட்சி தலைமை அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக கூட்டணி அமைத்தது. பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.
இதனால் பலரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். அதில், அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அன்வர் ராஜாவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தில் இருந்துள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அன்வர் ராஜா வகித்தார். மேலும் அதிமுகவில் இஸ்லாமிய முகமாகவும் அன்வர் ராஜா இருந்து வந்தார். இப்படியான நிலையில், பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தில் இருந்துள்ளார். இதனால், பாஜகவுக்கு எதிராக பல கருத்துகளை அவர் பொதுவெளியில் பேசி வந்துள்ளார்.




Also Read : ”வறுமை இல்லாத, சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு, கம்பர் கண்ட கனவு” – முதல்வர் ஸ்டாலின்..
அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு
பத்திரிகைச் செய்தி
இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் திரு. அ.அன்வர்ராஜா அவர்கள் நியமிக்கப்படுகிறார்.#DMK pic.twitter.com/MG76HAaMkl
— DMK (@arivalayam) August 9, 2025
இதனை அடுத்து, 2025 ஜூலை 21ஆம் தேதி அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகினார். இதனை அடுத்து, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இது அதிமுக பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இன்னும் பல தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
Also Read : ”கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” – சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் சண்முகம்
இப்படியான சூழலில், கட்சி இணைந்த ஒரே வாரத்தில் அன்வர் ராஜாவுக்கு திமுக தலைமை முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளது. அதாவது, திமுகவின் இலககிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த இந்த பதவியை அன்வர் ராஜாவுக்கு திமுக தலைமை கொடுத்து அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.