உல்லாசமாக இருக்க அழைத்த ஆங்கிலோ இந்தியன் பெண்.. நம்பி சென்ற தொழிலதிபருக்கு ஷாக்.. 20 சவரன் நகை, பணம் கொள்ளை!

Anglo-Indian Woman Arrested for Scamming Businessman | சென்னை ஓட்டேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மசாஜ் கிளப்பில் வேலை செய்யும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், அவரின் பேச்சை கேட்டு உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு சென்ற நிலையில், அவரிடம் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

உல்லாசமாக இருக்க அழைத்த ஆங்கிலோ இந்தியன் பெண்.. நம்பி சென்ற தொழிலதிபருக்கு ஷாக்.. 20 சவரன் நகை, பணம் கொள்ளை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

23 Jun 2025 11:08 AM

 IST

சென்னை, ஜூன் 23 : சென்னையில் (Chennai) ஆங்கிலோ இந்தியன் பெண்ணுடன் (Anglo Indian Woman) உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட, மரக்கடை உரிமையாளரிடம் இருந்து 20 சவரன் தங்க நகை மற்றும்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் விடுதிக்கு வாருங்கள் என அந்த ஆங்கிலோ இந்தியன் பெண் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நம்பி சென்ற நபருக்கு இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த மோசடி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மசாஜ் கிளப் ஆங்கிலோ இந்தியன் பெண்ணுடன் தொடர்பு

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். 50 வயதாகும் இவர் மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் ஒரு தொழிலதிபராகவும் உள்ளார். இந்த நிலையில், சார்லஸ் வாரத்திற்கு ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது சார்லஸுக்கும் அந்த கிளப்பில் பணியாற்றி வந்த ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

உல்லாசமாக இருக்க சென்ற மரக்கடை உரிமையாளர்

இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சார்லஸை செல்போனில் தொடர்ப்புக்கொண்ட ஆண்ட்ரியா, சூளைமேட்டில் தனக்கு தெரிந்த ரேகா சாவித்ரி என்ற பெண்ணின் வீடு உள்ளதாகவும், அங்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் சார்லஸிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆண்ரியாவின் ஆசை வார்த்தைக்கு இணங்கிய சார்லஸ், அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

நகை பணத்தை பரித்துக்கொண்டு அனுப்பிய கும்பல்

ஆனால், அங்கு சென்ற போது ரேக்கா என்ற பெண்ணும் அவருடன் இரண்டு ஆண்களும் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். தங்களை காவல்துறையினர் என அறிமுகம் செய்துக்கொண்ட அவர்கள், சார்லஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவர் மயங்கி விழவே, அவர் அணிந்திருந்த 20 சவரன் தங்க நகைகள், விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி, சார்லஸின் வங்கி கணக்கில் இருந்து யுபிஐ மூலம் ரூ.40,000 பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் சார்லஸை அனுப்பி வைத்துள்ளனர்.

காதலனுடன் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரியா

இந்த விவகாரம் குறித்து சூளைமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடி சம்பவத்தில் ஆண்ட்ரியா மற்றும் அவரது காதலன் கோகுல கிருஷ்ணன் தான் முதன்மை காரணம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், அவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வந்த போலீசார் இருவரையும் நேற்று (ஜூன் 23, 2025) மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்தனர்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..