AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வருகிறதா அதிகார மோதல்? தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி!

Anbumani Meets Ramadoss : தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். இதனால், இவருக்கும் இடையில் இருக்கும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

முடிவுக்கு வருகிறதா அதிகார மோதல்? தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி!
அன்புமணி - ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Jun 2025 10:17 AM IST

சென்னை,  ஜூன் 05: தைலாபுரம் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் (PMK Internal issues) ராமதாஸை, அன்புமணி (Anbumani ramodoss) சந்தித்துள்ளார். தந்தை மகன் மோதல் வலுத்துவந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இதனால், இவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் சொல்லப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை மகன் இருவரும் அதிகார மோதல்கள் இருந்து வருகிறது. இது வெளிப்படையாகவே  தெரிகிறது. குறிப்பாக, தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்ததில் இருந்தே, இருவருக்கு கருத்து மோதல் நிலவி வருகிறது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பாமகவில் உட்கட்சி பிரச்னை

சமீபத்தில் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படுவதாகவும், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் கூறியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு நடந்த, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்த கொள்ளவில்லை.

இது இருவருக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகப்படுத்தியது. இதனை அடுத்து, 2025 மே 29ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார். இது கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் ஒவ்வொரு நாளுக்கு நீக்கி அறிவிப்பை வெளியிட, அன்புமணி அவர்கள் கட்சி தொடர்கிறார் என்று அறிவித்தார். இப்படியே, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என தொடர்வதால்  கடும் குழப்பத்தில் உள்ளனர்.

தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி


இதனால், ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்த சீனியர் நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். மேலும், கட்சிக்குள் இந்த பிரச்னை வேண்டாம் எனவும் சீனியர் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை சந்தித்த அன்புமணி தைலாபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவரை சந்தித்து அனைத்து பிரச்னைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இவருக்கும் இடையில் இருக்கும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

Follow Us