மேற்குவங்கம்-தமிழகம் அம்ரித் பாரத் ரயில்…புறப்படும் நேரம்…தேதி…அறிவிப்பு!
Amrit Bharat Train: மேற்கு வங்கம்- தமிழகம் இடையேயான 3 அமரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் சேவை எப்போது தொடங்குகிறது. எந்தெந்த ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளன குறித்த முழு விவரங்கள்.

அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும் தேதி அறிவிப்பு
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் சேவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, வந்தே பாரத் ரயில்களுக்கு இணையாக அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மேற்குவங்கம் – தமிழ்நாடு இடையே 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, இந்த 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான ஒப்புதலை அண்மையில் ரயில்வே வாரியம் அளித்திருந்தது. அதன்படி, இந்த ரயிலானது விரைவில் தமிழகம்- மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இடையே இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, இந்த 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தமிழகத்தில் 2- ஆம் கட்டமாக இயக்கப்பட உள்ளது.
அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும் தேதி
அதன்படி, ஜபால்பாய்குரியில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலானது ( வண்டி எண்: 02609) நாளை ஜனவரி 17- ஆம் தேதி ( சனிக்கிழமை) பிற்பகல் 1:45 மணிக்கு ஜபால்பாய்குரியில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 19-ஆம் தேதி ( திங்கள் கிழமை) திருச்சி வந்தடையும். ஜபால்பாய்குரி- திருச்சி இடையேயான இந்த ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்”.. திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்!!
ஜமால்பாய்குரி-திருச்சி அம்ரித் பாரத்
இதேபோல, ஜமால்பாய்குரியில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலானது ( வண்டி எண்- 02603) நாளை ஜனவரி 17- ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 1:45 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 19- ஆம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த அம்ரித் பாரத் ரயிலானது வேலூர் மாவட்டம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்பட உள்ளது.
சந்திரகாச்சி-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை
சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது ( வண்டி எண்- 06108) வருகின்ற ஜனவரி 18- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:45 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 19- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மாலை 6:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலானது, சென்னை எழும்பூர், சூலூர் பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்பட உள்ளது. ஏசி வசதியுடன், இருக்க வசதி கொண்ட இந்த ரயிலானது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் தேதி விரைவில் அறிவிப்பு
இந்த ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 1,834 பேர் வரை பயணம் செய்யலாம். இதில், பக்தர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த ரயில்கள் தமிழகத்திலிருந்து புறப்படும் நேரம் மற்றும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தின் முதல் அம்ரித் பாரத் ரயிலானது ஈரோடு- பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!