Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu CM MK Stalin: கண்ணாடி வீட்டில் கல்லெறியும் பாஜக.. படையப்பா காமெடியை கொண்டு விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

Amit Shah vs MK Stalin: அமித்ஷாவின் தமிழக அரசு திட்ட செயல்பாடு குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமரின் பெயர் கொண்ட திட்டங்களில் மாநில அரசின் அதிக செலவினத்தைக் சுட்டிக்காட்டி, "கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதை நிறுத்த வேண்டும்" என மத்திய பாஜக அரசைக் கண்டித்துள்ளார். இந்த சர்ச்சைக்கு அமித்ஷாவின் மதுரைப் பேச்சு காரணமாக அமைந்தது.

Tamil Nadu CM MK Stalin: கண்ணாடி வீட்டில் கல்லெறியும் பாஜக.. படையப்பா காமெடியை கொண்டு விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
படையப்பா பட காமெடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2025 17:35 PM IST

சென்னை, ஜூன் 14: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் (Union Minister Amit Shah) கருத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு (BJP Government) மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வாரம் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கான வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ தமிழ்நாடு அரசு எந்த திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. வெற்று அறிவிப்புகளாக உள்ளது.” என்று தெரிவித்தார். இதற்கு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய முக்கிய கருத்துகள்:

  •  PMAY என்ற பிரதமர் வீடு வழங்கும் திட்டம், PMMSY என்ற பிரதமர் மீன்வளத் திட்டம் , Jaljeevan என்ற உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும், அதில் ஒட்டப்படும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாக செலவு செய்வது மாநில அரசுதான்!
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படக் காமெடி போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.
  • இது இந்து நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

மதுரையில் அமித்ஷா பேசியது என்ன..?

முன்னதாக, மதுரையில் பேசிய அமித்ஷா, “தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுப்பார்கள். நான் டெல்லியில் வசித்தாலும், என் காதுகள் எப்போதும் தமிழ்நாட்டின் மீதுதான் இருக்கும். அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கட்சியை தோற்கடிப்பார்கள். இந்தியாவில் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழில் நான் பேச முடியாததற்கு, தமிழ்நாட்டு பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திமுக அரசு முழுமையான தோல்வியை அடைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.