Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக, திமுக மீது விமர்சனம்.. ஆட்சிக்கு வந்தால் எல்லா சார் மீதும் நடவடிக்கை – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சி - சீமான்: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அதிமுக, திமுக என எல்லா சார் மீதும் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை ஒழிப்பதே எங்கள் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக, திமுக மீது விமர்சனம்.. ஆட்சிக்கு வந்தால் எல்லா சார் மீதும் நடவடிக்கை – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 14 Jun 2025 19:32 PM

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam) அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் பிரதானமாக விளங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவு வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவை வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் (2026 State Assembly Election) அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக மாறி உள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான அதிமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க திமுக அரசு மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக திமுகவை விமர்சித்த சீமான்:

இது போன்ற சூழலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இருக்கும் திமுக அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளையும் ஒழிப்பது எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் பாஜகவை ஒழிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது, ஆனால் திமுகவை ஒழிக்க வேண்டும் என அதிமுக நினைக்கிறது, இந்த மூன்று கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில உரிமைகளை பாஜக பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்ற பேச்சு வார்த்தைகள் அடிபட்டபோது இம்முறையும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் தோல்வியை பார்த்து பயந்தவர்கள் நாங்கள் இல்லை என தெளிவாக கூறியுள்ளார்.

எல்லா சார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்:


மேலும் கொடைநாடு கொலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு என எந்த சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாடியுள்ளார் அதேபோல் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் எல்லா சார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்