எதிர்க் கட்சிகளின் அரவணைப்பில் தவெக மாவட்ட செயலாளர்கள்?விஜய் வைத்த செக்!
Vijay Monitor Tvk District Secretaries: அதிமுக மற்றும் திமுகவின் அரவணைப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்களை கண்காணிக்கும் 3- ஆவது கண்ணை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மக்கள் சந்திப்பு பயணம், பொதுக்கூட்டம், மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என அனைத்தையும் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில், மாவட்ட செயலாளர்கள் வேட்பாளராக நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக-திமுக அரவணைப்பில் தவெக மா.செ.க்கள்
இந்த மாவட்ட செயலாளர்களை தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறக்குவதற்கு விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பட்டியில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் அதிமுக மற்றும் திமுகவின் அரவணைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவின் டீம் மேற்கொண்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் விலை போகும் நிலை
அண்மையில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகளிடம் விலை போயினர். இது பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருந்தது. இது போன்ற இடர்பாடுகளை தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தவிர்ப்பதற்காக தனது கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பதற்காக விஜய் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
மா.செ.க்களை கண்காணிக்கும் விஜயின் 3-ஆவது கண்
அதன்படி, தனது கட்சியில் உள்ள 120 மாவட்ட செயலாளர்களை கண்காணிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனமானது தமிழக வெற்றிக் கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளை மிக துல்லியமாக கண்காணித்து தவெக தலைவர் விஜய்க்கு தெரிவிக்கிறதாம். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்க்கு தீவிர விசுவாசியாக இருப்பவர்களுக்கு எந்த வித பொறுப்பும் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததாம்.
மன வருத்தத்தில் விஜயின் விசுவாசிகள்
இது தொடர்பாக விஜய்க்கு வந்த புகார்களை தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையனிடம் அளித்து சரி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மன வருத்தத்தில் உள்ள விஜயின் விசுவாசிகளிடம் கே. ஏ. செங்கோட்டையன் நேரடியாக பேசுவதாக கூறப்படுகிறது. இது தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்…4 தீர்மானம் நிறைவேற்றம்…விஜய்க்கு முழு அதிகாரம்!



