Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்…4 தீர்மானம் நிறைவேற்றம்…விஜய்க்கு முழு அதிகாரம்!

Tvk District Secretaries Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் படி, கட்சியின் தலைவர் விஜய்க்கு கூட்டணி தொடர்பான முடிவு எடுப்பதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்…4 தீர்மானம் நிறைவேற்றம்…விஜய்க்கு முழு அதிகாரம்!
தவெக கூட்டத்தில் 4 தீர்மானம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Dec 2025 16:35 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 11) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை ஏற்று கூட்டணிக்கு வரக்கூடியவர்களை அரவணைக்க வேண்டும். கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுப்பதற்கு கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

தேர்தல் சிறப்பு குழு அமைப்பு

இதே போல, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கக்கூடிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவை தலைவர் விஜய் தலைமையில் வழி நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காலியாகும் மாநிலங்களவை சீட்.. திமுக – அதிமுக போடும் புது கூட்டணி கணக்கு!!

மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கும் குழு

இதே போல, சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கான வாக்குறுதிகளை வழங்குவதற்காக ஒரு குழுவை உருவாக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை குழுவில் எந்தெந்த நிர்வாகிகள் இருப்பார்கள் என்பதை கட்சியின் தலைவர் விஜய்யிடம் கலந்து ஆலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று மாநில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்காத தவெக தலைவர் விஜய்

இந்தக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. அவருடைய அறிவுறுத்தலின் பேரில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கிய தவெக

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொதுக்குழு கூட்டம், தேர்தல் பிரசாரம், விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார்