அமமுகவை தவிர்க்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெறாது…டிடிவி தினகரன்!
No Party That Avoids AMMK Can Win Election: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை தவிர்க்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தருமபுரியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த கட்சியினர் அதிகாரம் அளித்தது பொதுவான ஒன்றுதான். அனைத்து கட்சிகளிலும் அதன் தலைமைக்கு அதிகாரம் அளிப்பது இயல்பான ஒன்றாகும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் கட்சிக்கான அதிகாரம் எனக்கு வழங்கப்படும். எடப்பாடி பழனிசாமி பேசிய வார்த்தைகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது.
கூட்டணி குறித்து அமமுக முடிவு எடுக்கவில்லை
ஜி ஆர் சுவாமிநாதனின் அதிகாரத்துக்கு உட்பட்டு அவர் அளித்த தீர்ப்பை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற வரை திமுக கொண்டு சென்றது தேவையில்லாத ஒன்றாக தெரிகிறது. எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் முடிவு செய்யவில்லை. சில கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களிடம் கூட்டணிக்கு வருமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மையாகும்.
மேலும் படிக்க: ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!
தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தக் கூடாது
இதில், நாங்கள் எடுக்கும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் பாமக நடத்தவிருக்கும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன். தமிழகத்தில் கடவுளின் பெயரால், ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கோவில்களின் பெயரால் எந்த கட்சியும் குழப்பத்தையும், மதக் கலவரத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
அமமுகவை தவிர்க்கும் எந்த கட்சியும்…
தமிழக மக்கள் ஜாதி மதங்களை கடந்து சகோதர, சகோதரிகளாக நிம்மதியாக வாழும் சூழ்நிலைக்கு எந்த கேடும் ஏற்பட்டு விடக்கூடாது. இதை அரசும், நீதிமன்றமும் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த ஒரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெறுகின்ற கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும்.
வளர்மதியின் பேச்சுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து பல பேர் சுயநலத்துக்காகவும், சுய லாபத்துக்காகவும், பதவிக்காகவும் விலகி வேறு கட்சியில் போய் சேர்ந்துள்ளனர். அதனால், மற்ற கட்சியிலிருந்து எம்எல்ஏக்களில் விலைக்கு வாங்குவது தேவையில்லாத ஒன்றாகும். அதிமுக பொதுக்கூட்டத்தில் வளர்மதி பேசிய கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஸ்டாலினை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி…அனல் பறந்த பேச்சு!



