AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான போக்குவரத்தில் அதிரடி.. தமிழகத்தில் டாப் இடத்தை பிடித்த விமான நிலையம் எது தெரியுமா?

Tamil Nadu Airports: தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்கள் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், சென்னை விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

விமான போக்குவரத்தில் அதிரடி.. தமிழகத்தில் டாப் இடத்தை பிடித்த விமான நிலையம் எது தெரியுமா?
தமிழக விமான நிலைய தரவரிசை பட்டியல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 03 May 2026 17:32 PM IST

இந்தியாவில் 2025- 2026 நிதி ஆண்டில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்கள், சரக்கு போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகிய பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்கள் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் 2 கோடியை 30 லட்சத்து 13 ஆயிரத்து 324 பயணிகள் பயன்படுத்தியதாக முதல் இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.7 சதவீதம் அதிகம் ஆகும். இதே போல, கோயம்புத்தூர் விமான நிலையம் 32 லட்சத்து 20 ஆயிரத்து 745 பயணிகள் பயன்படுத்தியதாக 2- ஆவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகம் ஆகும். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கடந்த நிதி ஆண்டில் 22 ஆயிரத்து 462 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன. மொத்தமாக 34 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

3- ஆவது இடத்தில் திருச்சி விமான நிலையம்

அதன்படி, கோயம்புத்தூரில் கடந்த நிதி ஆண்டில் 2.97 லட்சம் பயணிகள் சர்வதேச பயணத்தை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். இதே போல, 31.2 லட்சம் பயணிகள் உள்நாட்டு பயணத்தை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தை உபயோகப்படுத்தி உள்ளனர். திருச்சி விமான நிலையம் 22.2 லட்சம் பயணிகளுடன் 3- ஆவது இடத்தில் உள்ளது. மதுரை விமான நிலையம் 13.8 லட்சம் பயணிகளுடனும் தூத்துக்குடி விமான நிலையம் 2.90 லட்சம் பயணிகளுடனும், சேலம் விமான நிலையம் 1.27 லட்சம் பயணிகளுடன் 4- ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க: பைக் ஓட்டி மீது விழுந்த ராட்சத விளம்பர பேனர்.. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்!!

திருப்பூரில் இருந்து அவசர கால ஆர்டர்கள் அனுப்பி வைப்பு

இதில், சர்வதேச சரக்குகள் 1,908 மெட்ரிக் டன் மற்றும் உள்நாட்டு சரக்குகள் 11 ஆயிரத்து 268 டன் என 13 ஆயிரத்து 176 டன் சரக்கு கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து அவசர கால ஏற்றுமதி ஆர்டர்களை நாங்கள் விமானத்தில் அனுப்பி வைத்து வருகிறோம். இதனாலும் விமான சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. சர்வதேச சரக்கு போக்குவரத்து 2 சதவீதமும், உள்நாட்டு சரக்கு போக்குவரத்து 10 சதவீதமும் அதிகரித்துள்ளது.

வர்த்தக பயணத்துக்காக விமான பயன்பாடு

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தக பயணத்துக்காக விமான பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் சர்வதேச பயணத்திற்காக 2 லட்சத்து 97 ஆயிரத்து 760 பேரும், உள்நாட்டு பயணத்துக்கு 31 லட்சத்து 22 ஆயிரத்து 985 பேரும் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயணி – சென்னையில் பரபரப்பு

Follow Us