AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பைக் ஓட்டி மீது விழுந்த ராட்சத விளம்பர பேனர்.. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்!!

நெடுஞ்சாலைகளில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அனுமதியின்றி அல்லது பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பைக் ஓட்டி மீது விழுந்த ராட்சத விளம்பர பேனர்.. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்!!
பேனர் விழுந்து விபத்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 May 2026 11:30 AM IST

திருப்பூர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டி ஒருவர் மீது, காற்றில் பறந்து வந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று திடீரென விழுந்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலையில் இன்று பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவியது. அப்போது சாலையில் பைக் ஓட்டி ஒருவர் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு ராட்சத விளம்பர பேனர் காற்றின் வேகம் தாங்காமல் திடீரென கிழிந்து சாலையில் விழுந்தது.

இதையும் படிக்க: தமிழக காங்கிரஸுக்கு பெண் தலைவர்?.. டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனை.. மே 10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

பைக் ஓட்டிக்கு முன்பு விழுந்த பேனர்:

துரதிர்ஷ்டவசமாக அந்த பேனர், சரியாக அந்த பைக் ஓட்டிக்கு முன்பாக சாலையில் விழுந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் பைக் அந்த பேனரில் ஏறவே, நிலைதடுமாறிய அந்த நபர், பைக்கிலிருந்து கீழே விழுந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்குப் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.

கூடுதல் தகவல்கள்:

பேனர் விழுந்த வேகத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், பின்னால் வந்த வாகனங்கள் வேகம் குறைவாக இருந்ததால், உடனடியாக சுதாரித்துக்கொண்டு வாகனத்தை நிறுத்தியதாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காற்றின் போது முறையாகப் பராமரிக்கப்படாத பேனர்கள் விழுவது பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை:

நெடுஞ்சாலைகளில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அனுமதியின்றி அல்லது பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாகச் சாலை ஓரங்களில் உள்ள பேனர்கள் மற்றும் மரங்களுக்கு அருகில் செல்லும் போது கவனம் தேவை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பேனர் கலாச்சாரத்திற்கு எதிரான விவாதத்தையும் மீண்டும் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!

Follow Us