’ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ கடம்பூர் ராஜு பேச்சால் சலசலப்பு!

AIADMK EX Minister Kadabur Raju : அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஜெயலலிதா குறித்து பேசியது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தான் ஜெயலலிதா பற்றி பேசவில்லை என்றும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததை தான் கூறினேன் என விளக்கம் அளித்தார்.

’ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை கடம்பூர் ராஜு பேச்சால் சலசலப்பு!

கடம்பூர் ராஜூ

Updated On: 

30 Jul 2025 15:57 PM

சென்னை, ஜூலை 30 : ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்றும் 1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை (AIADMK BJP Alliance) ஜெயலலிதா கவிழ்த்ததால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ (Kadabur Raju) பேசிய கருத்து கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுபோன்ற கருத்துக்கு கடம்பூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, 1999ல் பாஜகவுடன் கூட்டணியில் திமுக ஆட்சி அமைத்ததை தான் கூறினேன் என்றும் தன்னுடைய தவறாக திரித்து பேசி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Polls) இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்ததில் இருந்தே சலசலப்புகள் இருந்து வருகிறது.

கூட்டணி ஆட்சி விவகாரம் கூட்டணிக்குள் பேசும் பொருளாக மாறி இருக்கும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேச்சால் சலசலப்புகள் தீவிரம் அடைந்துள்ளது. அதாவது, ஜெயலலிதா குறித்து கடம்பூர் ராஜூ பேசியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “1998ஆம் ஆண்டு நாங்கள் தவறு செய்துவிட்டோம்.

Also Read : ’வருங்கால துணை முதல்வரே’ பதறிய நயினார் நாகேந்திரன்.. நிர்வாகி செய்த சம்பவம்!

’ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இருந்தது. சுப்பிரமணிய சுவாமி பேச்சை கேட்டு, ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி வரலாற்றி பிழை நாங்கள் செய்தோம். அன்று பாஜக திமுக கூட்டணி வைத்ததற்கு இதுவே காரணம். இதனால், திமுக 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது.

திமுகவும் அதிகாரம் கொடுத்ததே பாஜக தான். தமிழகத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு பாஜக தான் காரணம். அந்த நன்றி உணர்வு இருக்க வேண்டும். இன்று திமுக, பாஜகவை தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறார்கள்.  ஜெயலலிதா அந்த வரலாற்று தவறை செய்யவில்லை என்றால், திமுக என்ற கட்சியை இருந்திருக்காது “ என கூறினார்.

கடம்பூர் ராஜூவின் பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாஜகவை திருப்திபடுத்த ஜெயலலிதாவை விமர்சிப்பதா என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், கடம்பூர் ராஜூ இதற்கு மறுத்துள்ளார். தான் அப்படி கூறவில்லை என்றும் தன்னுடைய  பேச்சை தவறாக திரித்து பேசி வருகிறார்கள் என விளக்கம் அளித்தார்.

Also Read : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!

1998ல் நடந்தது என்ன?

1998ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது, சில காரணங்களாக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்றார். இதனை அடுத்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து, அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக பாஜக கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.