கரூர் சம்பவத்துக்கு நீங்களும் காரணம்… முதல்வரின் வீட்டில் கைகட்டி நின்றீர்கள்.. விஜய் மீது அதிமுக கடும் குற்றச்சாட்டு
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்திருந்த நிலையில், அதிமுக விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கரூர் சம்பவத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளது.

விஜய்
சென்னை, ஜனவரி 25 : தவெக தலைவர் விஜய் (Vijay) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அதிமுக முன்வைத்துள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு நீங்களும் ஒரு காரணம் என்றும், நீங்கள் தான் மிகப்பெரிய ஊழல்வாதி என்றும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை நேரடியாக குறிப்பிடாமல், பாஜகவின் அடிமை கட்சி என்றும் ஊழல் கட்சி என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் சமூக வலைதளங்களில் விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது.
விஜய் மீது அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு
இது தொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. ‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு. என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க : “அழுத்தம் இருக்கிறது.. அழுத்தத்திற்கு அடங்கிப் போகமாட்டேன்”.. விஜய் பரபர பேச்சு
அதிமுக ஐடி விங் எக்ஸ் பதிவு
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
‘மத்திய அரசிற்கு அடிமை’…
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) January 25, 2026
மேலும், தனது பதிவில், தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே. என்று விமர்சித்துள்ளது.
இதையும் படிக்க : விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது…கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அதே ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா? நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களே? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம். இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம் இவ்வாறு அதிமுக ஐடி விங் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.