Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லையில் அதிர்ச்சி.. 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல்.. தீவிர சிகிச்சை!

Tirunelveli Rat Fever : திருநெல்வேலி திடியூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்லூரியை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. எலிக் காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நெல்லையில் அதிர்ச்சி.. 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல்..  தீவிர சிகிச்சை!
எலிக் காய்ச்சல்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 13:05 PM IST

 திருநெல்வேலி,  அக்டோபர் 10 :  திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மறு உத்தரவு வரும் வரை பொறியயல் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எலிக் காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். நெல்லை மட்டுமின்றி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியில் படித்து வரும் 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, சமீபத்தில் உவரி பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது.  இதனால், அந்த மாணவர் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவும் ’லெப்டோஸ்பைரோசிஸ்’ எனும் எலிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை உடனை நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Also Read : ரூ.9.5 கோடியில் உயர் ரக கஞ்சா.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர!

கல்லூரி மாணவர்களுக்கு  எலிக் காய்ச்சல்

மேலும், முகாம் நடத்தி மாணவர்களுக்கு நடத்திய சோதனையில் 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கல்லூரி விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தியதால் இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள், மாவு அரைக்கும் எந்திரம் சுத்தமாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, உணவுக்ககூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

Also Read : மூலிகை சிகிச்சை.. அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன காது!

சுகாதார மற்ற தண்ணீர் போன்ற காரணங்களால் எலிக் காய்ச்சல் மாணவர்களை பாதித்து இருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.  தொடர்ந்து, 2025 அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் கல்லூரிகளிம் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் தற்காலிகமாக கல்லூரி மூடப்படும் என உத்தரவிட்டனர்.