மூலிகை சிகிச்சை.. அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன காது!
Chennai Crime News : சென்னையில் அழகு நிலையத்தில் மூலிகை சிகிச்சை பெற்ற பெண், தனது இரு காதுகளை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதின் ஓட்டையை மூலிகை சிகிச்சை மூலம் குறைக்க முடியும் அழகு நிலைய உரிமையாளர் கூறியதை அடுத்து, அந்த பெண் இவ்வாறு செய்துள்ளார். இதனால், அந்த பெண் தனது இரு காதுகளை அறுவை சிகிச்சை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை, அக்டோபர் 09 : சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அரும்பாக்கத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் மூலிகை சிசிச்சை மேற்கொண்டார். அப்போது, அரிக்கும் தன்மை கொண்ட அமிலத்தால் பாதிக்கப்பட்ட, தனது இரு காது மடல்களையும் அந்த இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க அழகு நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் வி.ஜெயந்தி. இவர் ஒப்பனை கலைஞராக உள்ளார். இவர் காதில் கம்மல் அணிவதற்கு போடப்பட்ட ஓட்டையின் அளவு பெரிதாக இருந்துள்ளது. இந்த ஓட்டையின் அளவை குறைக்க அவர் நினைத்தார். அதற்காக அரும்பாக்கத்தில் உள்ள பிரபல அழகு நிலையத்திற்கு அவர் சென்றிருக்கிறார். அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி.
அவர் காதின் ஓட்டையை மூலிகை சிகிச்சை மூலம் குறைக்க முடியும் என ஜெயந்தியிடம் கூறினார். அதற்கு ரூ.2,000 என கூறியிருக்கிறார். அந்த பணத்தையும் ஜெயந்தி செலுத்தியுளளார். தொடர்ந்து, காதின் ஓட்டையை குறைக்க ஜெயந்தி காதில் மூலிகை கலவை ஒன்றை அகிலாண்டேஸ்வரி தடவியுள்ளார். உடனே ஜெயந்திக்கு ஏரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு, அவரது இரு காதுகளும் கிழந்து தொங்கியுள்ளது. இதனை அடுத்து, ஜெயந்தி மருத்துவமனைக்கு சென்றார். மூலிகை சிகிச்சை என்பது ட்ரைக்ளோரோஅசெடிக் அமிலம் என்றும் இது அரிக்கும் ரசாயனம் என மருத்துவர்கள் கூறினர்.
Also Read : குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு? – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்!




அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இதனை அடுத்து, மருத்துவர்கள் இரு காது மடல்களையும் அறுவை சிக்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது. இதனால் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அழகு நிலையம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் 2023ல் நடந்துள்ளது. இந்த வழக்கு விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் அழகு நிலைய உரிமையாளர் முறையாக அனுமதி இல்லாமல் சிகிச்சை செய்ததாக தீர்ப்பளித்தது.
Also Read : கோவை மக்களின் கனவு.. அவிநாசி மேம்பாலம் இன்று திறப்பு.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
இது தெளிவான சேவை குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு நிலைய உரிமையாளுக்கு ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையின்போது, ஒரு ஒப்பனைக் கலைஞராக தனது முழு தன்னம்பிக்கையை இழுந்ததாகவும், தனது உருவ மாற்றத்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும், சமூகத்தில் இயல்பாக பழக முடியவில்லை எனவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.