காரில் எரிந்த நிலையில் முன் இருக்கையில் ஆண்.. பின் இருக்கையில் இரு குழந்தைகளுடன் பெண் சடலம்.. மனதை ரணமாக்கும் சம்பவம்!

Tirunelveli Crime: திருநெல்வேலி மாவட்டத்தில் காரில் எரிந்த நிலையில், இருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காரின் முன் பகுதியில் ஒரு ஆணும், பின் பகுதியில் பெண் மற்றும் இரு குழந்தைகள் கருகிய நிலையில் இருந்தனர்.

காரில் எரிந்த நிலையில் முன் இருக்கையில் ஆண்.. பின் இருக்கையில் இரு குழந்தைகளுடன் பெண் சடலம்.. மனதை ரணமாக்கும் சம்பவம்!

திசையன்விளையில் எரிந்த காரில் 4 சடலம் மீட்பு

Updated On: 

17 Mar 2026 12:02 PM

 IST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக வயல்காட்டு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், திசையன்விளை காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, காரின் உள்ளே 4 பேர் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து எலும்புகளாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர். இதே போல, மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு வர வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் மற்றும் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

முன் இருக்கையில் ஆண்- பின் இருக்கையில் பெண்ணுடன் இரு குழந்தைகள்

இதைத் தொடர்ந்து, காரில் எரிந்த நிலையில் கிடந்த சடலங்களை போலீசார் மீட்டு உடல் கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒரு ஆணும், பின் இருக்கையில் ஒரு பெண்ணும் அவருக்கு வலது மற்றும் இடது புறம் இரு குழந்தைகளும் இருப்பது போன்ற தடையங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: விஜய்-அருண்ராஜ் படம் ஒட்டிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்… வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததா? தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா

மேலும், அந்த காரின் சாவி ஆண் செய்த நிலையில் இருந்தது. இதேபோல, அந்த ஓட்டுனரின் இருக்கை சாய்ந்த நிலையில், அதாவது ஓட்டுநர் இருக்கையே சாய்த்து விட்டு தூங்குவது போல அமைப்பில் இருந்தது. இதனால், காரில் வந்தவர்கள் தூக்க கலக்கத்தால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கிய போது ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் கார் தீ பிடித்து எரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. காரில் எரிந்த நிலையில் கிடந்தது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய உடல்கள்

மேலும், யாரேனும் அடித்து கொலை செய்து காரில் வைத்து தீ வைத்து எரித்தனரா. அல்லது குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணையும் முடுக்கி விட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதால், காரின் எண் மற்றும் என்ஜின் எண் ஆகியவற்றை கைப்பற்றி போலீசாரி விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் முதல்முறையாக.. ஆன்லைனில் வேட்பு மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு..

Follow Us
அமெரிக்க உலகப்போர் நினைவு சின்னம் முன்பு நடனமாடிய இந்தியர் - சர்ச்சையாகும் வீடியோ
ஈரானின் புதிய தலைவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.92 கோடி பரிசு - அமெரிக்க அறிவிப்பு
கேஸ் தட்டுப்பாடு - புதிதாக ஒரு இணையதளத்தையே உருவாக்கிய இளைஞர்கள்
மஹாராஜா 2 அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்