IPL 2026: வெற்றியுடன் முக்கிய இடத்தை பிடித்த டெல்லி.. சரிவில் ராஜஸ்தான்..? லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை!
IPL 2026 Points Table: ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7வது இடத்தில் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், டெல்லி புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறியுள்ளது. டெல்லி ஆடிய 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) 19வது பதிப்பின் 43வது போட்டியில் நேற்று அதாவது 2026 மே 1ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது . இது அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாக அமைந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (Rajastan Royals), டெல்லி அணி வெற்றிபெற 226 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. டெல்லி அணி, 5 பந்துகள் மீதமிருக்க இந்த இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் வெறும் 40 பந்துகளில் 75 ரன்கள் குவித்த கே.எல். ராகுல், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டிக்குப் பிறகு புள்ளி அட்டவணையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ALSO READ: காத்திருக்கும் ரசிகர்கள்.. மும்பைக்கு எதிராக களமிறங்குகிறாரா தோனி..?
சரிந்ததா ராஜஸ்தான் ராயல்ஸ்..?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி அட்டவணையில் 4வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணி ஆடிய 10 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று, 4 போட்டியில் தோல்வியடைந்தது. 3வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் 2வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளும் தலா 12 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (+0.832) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+0.510) அணிகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+1.420) சிறந்த நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது.




டெல்லி கேப்பிட்டல்ஸ் முன்னேற்றம் கண்டதா?
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7வது இடத்தில் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், டெல்லி புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறியுள்ளது. டெல்லி ஆடிய 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் டெல்லி 8 புள்ளிகளையும், -0.895 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. அதேநேரத்தில், 5வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி அட்டவணையில் ஏழாவது இடத்திற்குச் சரிந்தது. சிஎஸ்கே 8 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 8வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன்படி, கொல்கத்தா 8 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 5ல் தோல்வியடைந்துள்ளது. மேலும், மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டது.
ALSO READ: சூர்யவன்ஷியை பார்த்து அவ்வளவு பயம்.. ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு கைல் ஜேமிசன் விளக்கம்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 8 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று, தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி -0.784 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளி அட்டவணையில் 9வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி -1.106 என்ற நிகர ரன் ரேட்டுடன் 10வது இடத்திலும் உள்ளன.