AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓட்டலில் சாப்பிட்டதை கண்டித்த தாய்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட 8 ஆம் வகுப்பு சிறுவன்!

13 Years Old Boy Killed Himself in Theni | தேனியில் அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதால் தாய் திட்டிய நிலையில், மனமுடைந்த 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டலில் சாப்பிட்டதை கண்டித்த தாய்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட 8 ஆம் வகுப்பு சிறுவன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jun 2025 08:07 AM IST

தேனி, ஜூன் 29 : தேனியில் (Theni) ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 8 ஆம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. டியூசனில் இருந்து வந்த சிறுவன் தனது தாயிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு ஓட்டலுக்கு சென்று பிரைடு ரைஸ் (Fried Rice) சாப்பிட்டுள்ளார். அதனை தாய் கண்டிக்கவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஓட்டலில் சாப்பிட்டதற்காக தாய் திட்டிட்ய நிலையில், சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓட்டலில் சாப்பிட்டதை கண்டித்த தாய் – தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சிறுவன்

தேனி மாவட்டம்  கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் குமார். லாரி ஓட்டுநரான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், திலீப் குமார் என்ற 13 வயது மகனும் இருந்தார். இந்த நிலையில் குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது டியூஷன் முடித்து வீட்டிற்கு வந்த சிறுவன் திலீப் குமார்,  தாய் மகாலட்சுமியிடம் பிரைடு ரைஸ் சாப்பிடுவதற்காக பணம் கேட்டுள்ளார். மகாலட்சுமியும் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த நிலையில், திலீப் குமார் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது எதற்காக வீட்டில் சாப்பிடாமல் அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுகிறாய் என திலிக்குமாரை அவரது தாய் மகாலட்சுமி கண்டித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்

இந்த நிலையில், தனது தாய் கண்டித்ததால் மனம் உடைந்த திலீப் குமார், அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் மகாலட்சுமி கதறி அழுதுள்ளார். இந்த நிலையில், சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவன் திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us