Year Ender 2025: 2025ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள்.. டாப் ஸ்கோரராக சுப்மன் கில்!
Top Run-Scorers in 2025: 2025 ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கே.எல். ராகுல் 24 போட்டிகளில் 1,180 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 சர்வதேச போட்டிகளில் 916 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 870 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணிக்காக அதிக ரன்கள்
2025ம் ஆண்டுமுடிவதற்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், 2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இந்த 2025ம் ஆண்டில் இந்திய அணி (Indian Cricket Team) 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 ஆசிய கோப்பைகளில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இதனுடன், விராட் கோலி, ரோஹித் சர்மா (Rohit Sharma) உள்பட பல இந்திய வீரர்களும் புதிய தனிப்பட்ட மற்றும் வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர். அதன்படி, 2026ம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக, 2025ம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து எந்த இந்திய வீரர்கள் அதிக ரன்கள் குவித்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இப்படி கலாய்ச்சுட்டாரே.. இங்கிலாந்தை மேடையில் கிண்டலடித்த ரோஹித்.. சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்!
சுப்மன் கில் முதலிடம்:
2025ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளனர். 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை என்றாலும், 2025ம் ஆண்டில் 3 வடிவங்களிலும் மொத்தம் 35 போட்டிகளில் விளையாடி 1,764 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியல் மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டில் 2025ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் கில் முதலிடத்தில் உள்ளார். இந்த2025ம் ஆண்டு, சுப்மன் கில் டெஸ்டில் 983 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 490 ரன்களும், டி20 போட்டிகளில் 291 ரன்களும் எடுத்துள்ளார்.
அதேநேரத்தில், 2025 ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கே.எல். ராகுல் 24 போட்டிகளில் 1,180 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 சர்வதேச போட்டிகளில் 916 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 870 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
ரன்கள் வாரியாக..
- 1764 ரன்கள் – சுப்மன் கில்
- 1180 ரன்கள் – கே.எல். ராகுல்
- 916 ரன்கள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 870 ரன்கள் – ரவீந்திர ஜடேஜா
- 859 ரன்கள் – அபிஷேக் சர்மா
- 674 ரன்கள் – விராட் கோலி
- 650 ரன்கள் – ரோஹித் சர்மா
- 629 ரன்கள் – ரிஷப் பண்ட்
- 586 ரன்கள் – வாஷிங்டன் சுந்தர்
- 567 ரன்கள் – திலக் வர்மா
ALSO READ: 2025ம் ஆண்டில் அடித்த லக்.. சாம்பியன் பட்டத்தை குவித்த இந்திய அணியினர்!
இந்த 2025ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் ஜோ ரூட்டுடன் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா ஏழு சதங்கள் அடித்துள்ளனர். இந்தியர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 சதங்கள்) மற்றும் விராட் கோலி (3 சதங்கள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.