Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025 Cricket Retirements: ரோஹித் முதல் புஜாரா வரை.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

Top Cricketers Retiring in 2025: 2025 ஆம் ஆண்டு பல முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சர்வதேச போட்டி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, வருண் ஆரோன் மற்றும் விருத்திமான் சஹா போன்ற வீரர்கள் தங்களது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டனர். இந்த ஓய்வுகள் இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன

2025 Cricket Retirements: ரோஹித் முதல் புஜாரா வரை.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!
2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Aug 2025 08:41 AM

2025ம் ஆண்டு பல கிரிக்கெட் வீரர்களுக்கு எண்ட் என்றே சொல்லலாம். கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், பல முக்கிய வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இப்போது அதில் புதிதாக இணைந்த பெயர் சேதேஷ்வர் புஜாரா. சேதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) தனது ஒருநாள் வாழ்க்கையில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் 103 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 7,195 ரன்கள் எடுத்தார். இந்தநிலையில், நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 24ம் தேதி ஓய்வை அறிவித்தார். அவருக்கு முன், ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் 2025 இல் ஓய்வு பெற்றனர்.

ALSO READ: டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட அரசன்.. புஜாரா படைத்த 5 அரிய சாதனைகள் இதோ!

2025ம் ஆண்டு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள்:

ரோஹித் சர்மா:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நெருங்கிக்கொண்டிருந்தது, ஐபிஎல் 2025 பாதி நடந்து கொண்டிருந்தபோது அதாவது, 2025 மே 7ம் தேதி ரோஹித் சர்மா தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார்.  ரோஹித் சர்மா ஏற்கனவே 2024 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

விராட் கோலி:

ரோஹித் சர்மா ஓய்வு பெற்று 5 நாட்கள் மட்டுமே ஆகின்றன. அதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு மே 12ம் தேதி, விராட் கோலியும் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்து, இனி ஒருபோதும் வெள்ளை  நிற ஜெர்சியில் இந்தியாவுக்காக விளையாட மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார். விராட் கோலியும் 2024 இல் டி20 வடிவத்திற்கும் விடைபெற்றார். அவரும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

வருண் ஆரோன்:

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசுவதில் பெயர் பெற்ற இவர், கடந்த ஜனவரி மாதம் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

விருத்திமான் சஹா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா இந்தியாவுக்காக மொத்தம் 49 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 2025 பிப்ரவரி 1ம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதுமட்டுமின்றி, விருத்திமான் சஹாவுக்கு 142 முதல் தர போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்.. தடுத்தது போதும் என முடிவு.. ஓய்வை அறிவித்தார் புஜாரா..!

சேதேஷ்வர் புஜாரா:


சேதேஷ்வர் புஜாரா தனது 37 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால் டெஸ்ட் ஜாம்பவானாக உருவெடுத்த இவர், இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் 43.60 சராசரியுடன் 7195 ரன்கள் எடுத்தார். அதில் 19 சதங்களும் அடங்கும்.