Cheteshwar Pujara Records: டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட அரசன்.. புஜாரா படைத்த 5 அரிய சாதனைகள் இதோ!
Cheteshwar Pujara Retires: சேதேஷ்வர் புஜாரா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது பொறுமையான பேட்டிங் மற்றும் நீண்ட இன்னிங்ஸ்கள் இந்திய கிரிக்கெட்டில் நினைவு கூரப்படும். இந்தக் கட்டுரை அவரது 5 அரிய சாதனைகளை விவரிக்கிறது. அதில் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகள் எதிர்கொண்டது முக்கியமான சாதனை ஆகும்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் ஜாம்பவான் சேதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 24ம் தேதி, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் ‘சுவர் 2.0’ என்று சேதேஷ்வர் புஜாரா அழைக்கப்படுகிறார். அதற்கான காரணமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சேதேஷ்வர் புஜாரா அரிய சாதனைகளை பற்றியும் இங்கே தெரிந்து கொள்வோம். இந்திய கிரிக்கெட்டில் (Indian Cricket Team) அவரது பொறுமையான பேட்டிங் மற்றும் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாடும் திறனுக்காகவே புஜாரா இந்தியாவின் சுவர் என்று அறியப்பட்டார்.
சேதேஷ்வர் புஜாரா 5 அரிய சாதனைகள்:
Resolute, resilient and rock solid – Cheteshwar Pujara at his finest 🌟
Tributes pour in for the star batter 👉 https://t.co/gT2EJf5rpI pic.twitter.com/dcftSyMbuV
— ICC (@ICC) August 24, 2025




ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகள்
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை சேதேஷ்வர் புஜாரா படைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி நடந்த ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 525 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, 672 நிமிடங்கள் களத்தில் இருந்தார். இந்தப் பட்டியலில் ராகுல் டிராவிட் ஒரு இன்னிங்ஸில் 495 பந்துகளை எதிர்கொண்டு 2வது இடத்தில் உள்ளார்.
அதிக இரட்டை சதங்கள்
முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை சேதேஷ்வர் புஜாரா படைத்துள்ளார். புஜாரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 18 இரட்டை சதங்களை அடித்துள்ளார். உலகளவில் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் டான் பிராட்மேன் 37 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிக 50 ப்ளஸ் ஸ்கோர்
இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியில் அதிக 50+ ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா. இந்த விஷயத்தில் புஜாரா, விராட் கோலியை விட முன்னணியில் உள்ளார். ஒரு வெற்றியில் அவர் 36 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் இதை 30 முறை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சச்சின் இதை 44 முறை செய்துள்ளார். ராகுல் டிராவிட் 38 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்.. தடுத்தது போதும் என முடிவு.. ஓய்வை அறிவித்தார் புஜாரா..!
டெஸ்டில் 5 நாளும் பேட்டிங் செய்த பெருமை
கடந்த 40 ஆண்டுகளில் ஒரு டெஸ்டின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா ஆவார். நவம்பர் 16, 2017 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டி மறக்கமுடியாததாக மாறியது. புஜாரா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்தார். முதல் இன்னிங்ஸில் 52 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்தார். புஜாராவுக்கு முன்பு, எம்.எல். ஜெய்சிம்ஹா (1960) மற்றும் ரவி சாஸ்திரி (1984) மட்டுமே இந்தியாவுக்காக இந்த அரிய சாதனையைச் செய்ய முடிந்தது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இந்தியரானார் புஜாரா. உலக அரங்கில் இதுவரை 13 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது.
அதிக வெற்றிகள்:
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாராவும் இடம்பெற்றுள்ளார். அதன்படி, 11 முறை SENA நாடுகளில் வெற்றி பெற்ற அணியில் புஜாரா இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் புஜாராவுக்குப் பிறகு விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். SENA நாடுகளில் தலா 10 முறை வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ALSO READ: ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்.. ரோஹித் சர்மா போட்ட பக்கா பிளான்!
புஜாரா கிரிக்கெட் வாழ்க்கை:
சேதேஷ்வர் புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 278 முதல் தரப் போட்டிகளிலும், 130 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 71 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முதல் தரப் போட்டிகளில் 21,301 ரன்களையும் 66 சதங்களையும் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டியில் 16 சதங்களுடன் 5,759 ரன்களையும் அடித்துள்ளார். டி20 போட்டியில் 1 சதத்துடன் 1,556 ரன்களையும் அடித்துள்ளார்.
புஜாரா இந்தியாவுக்காக 103 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 108 சர்வதேச போட்டிகளில், அவர் 7,200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், புஜாரா 19 சதங்களை அடித்துள்ளார். இதில் இவரது சிறந்த ஸ்கோர் 206 ரன்கள் ஆகும்.