Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cheteshwar Pujara Retirement: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்.. தடுத்தது போதும் என முடிவு.. ஓய்வை அறிவித்தார் புஜாரா..!

Cheteshwar Pujara Retires: சேதேஸ்வர் புஜாரா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 103 டெஸ்ட் போட்டிகள் உட்பட 7195 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்த புஜாரா, தனது சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

Cheteshwar Pujara Retirement: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்.. தடுத்தது போதும் என முடிவு.. ஓய்வை அறிவித்தார் புஜாரா..!
சேதேஸ்வர் புஜாராImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2025 12:08 PM

இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricket Team) ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்ட சேதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்மூலம், சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடமாட்டார். புஜாரா கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவுக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். அதுவும் 2023 உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாகும்.

ஓய்வு அறிவிப்பு:

இந்திய அணியில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா தனது ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் குறிப்பிட்டதாவது, “இந்திய ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்தை பாடி, ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது என்னால் முடிந்த சிறந்ததை கொடுக்க முயற்சி செய்தேன். இதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், அவர்கள் சொல்வது போல், ஒவ்வொரு நல்ல விஷயமும் முடிவுக்கு வர வேண்டும், அது நடந்துவிட்டது. மிகுந்த நன்றியுடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்.. ரோஹித் சர்மா போட்ட பக்கா பிளான்!

சேதேஷ்வர் புஜாரா கிரிக்கெட் வாழ்க்கை:


கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் சேதேஸ்வர் புஜாரா. அன்று முதல் 2023ம் ஆண்டு வரை புஜாரா இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் புஜாரா 5 டெஸ்ட் போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ALSO READ: ரோஹித், கோலிக்கு விரைவில் பிரியாவிடையா..? பிசிசிஐ விளக்கம்..!

சேதேஸ்வர் புஜாரா இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரை சதங்கள் மற்றும் 3 இரட்டை சதங்களுடன் 7,195 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதேஸ்வர் புஜாரா, இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக இருந்தாது. இந்திய அணி பல போட்டிகளில் தடுமாறியபோதெல்லாம், தூணாக நின்று மீட்டு கொடுத்துள்ளார்.