AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs South Africa Women’s T20 WC Highlights: இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

Ind W vs SA W : மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது. டாஸ் (நாணயச் சுழற்சி) மாலை 6.30 மணிக்கு நடைபெறும். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jun 2026 22:28 PM IST
Share
India vs South Africa Women’s T20 WC Highlights: இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
India Vs South Africa Womens T20 Wc

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது. டாஸ்மாலை 6.30 மணிக்கு நடைபெறும். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் நெதர்லாந்தையும் இந்தியா ஏற்கனவே வீழ்த்தியுள்ளது. வலிமையான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, அரையிறுதியை நோக்கி மற்றொரு அடியை எடுத்து வைப்பதே இந்தியாவின் இலக்காகும். தென்னாப்பிரிக்க அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. எனினும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. இந்தப் போட்டியின் நேரடித் தகவல்களை நீங்கள் டிவி9 தமிழ் தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Jun 2026 10:23 PM (IST)

    இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

    இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

  • 21 Jun 2026 10:05 PM (IST)

    16 ஓவர்கள் முடிவில்!

    16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து வெற்றி பெற 24 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க வேண்டும்.

  • 21 Jun 2026 09:46 PM (IST)

    தென் ஆப்பிரிக்கா 67/2 (11 ஓவர்கள்)

     

    11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் குவித்துள்ளது.

  • 21 Jun 2026 09:22 PM (IST)

    2 விக்கெட்டுகளை எடுத்த ஸ்ரீ சரணி

    தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அடியாக அமைந்துள்ளது. இந்திய வீராங்கணை ஸ்ரீ சரணி தென்னாப்பிரிக்காவின் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். லாரா வோல்வார்ட் மற்றும் அன்னேரி டெர்க்சன் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • 21 Jun 2026 09:15 PM (IST)

    முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

    159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணியில் முதல் அதிர்ச்சியாக லாரா வோல்வார்ட் 20 ரன்களுடன் வெளியேறினார்.

  • 21 Jun 2026 09:09 PM (IST)

    3 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா

    159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஓவர்கள் முடிவில் 17 ரன்கள் எடுத்துள்ளார். டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் ஆகியோர் இணைந்து அந்த அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்துள்ளனர்.

  • 21 Jun 2026 08:43 PM (IST)

    தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி  7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 21 Jun 2026 08:32 PM (IST)

    தீப்தி சர்மா அவுட்!

     

    மீண்டும் ஒரு ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற தீப்தி ஷார்ட் ஃபைன் லெக்திசையில் நின்றிருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்தார்.

  • 21 Jun 2026 08:03 PM (IST)

    5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

    17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  • 21 Jun 2026 07:45 PM (IST)

    3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!

    அயாபோங்கா காகா வீசிய பந்தில் யாஸ்திகா பாட்டியா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

  • 21 Jun 2026 07:31 PM (IST)

    2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

    ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து ஷபாலி வர்மாவும் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளார். இந்தியா தற்போது 5.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களுடன் விளையாடி வருகிறது.

  • 21 Jun 2026 07:20 PM (IST)

    ஸ்மிருதி மந்தனா அவுட்!

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில்,  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் அதிர்ச்சியாக ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். தற்போது இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் குவித்துள்ளது.

  • 21 Jun 2026 07:12 PM (IST)

    முதல் ஓவரில் 9 ரன்கள்

    இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஒன்பது ரன்களை எடுத்தது. ஷஃபாலி வர்மா இரண்டு பந்துகளில் ஆறு ரன்களுடனும், ஸ்மிருதி மந்தனா நான்கு பந்துகளில் மூன்று ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  • 21 Jun 2026 06:55 PM (IST)

    ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய சாதனை!

    200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் பதிவு செய்துள்ளார். அத்துடன், சார்லோட் எட்வர்ட்ஸுக்குப் பிறகு 200 சர்வதேசப் போட்டிகளுக்குத் தலைமை தாங்கும் இரண்டாவது பெண் வீராங்கனையாகவும் அவர் அமையவுள்ளார்.

  • 21 Jun 2026 06:39 PM (IST)

    IND-W vs SA-W: டாஸ் வென்றது இந்தியா

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அதன்படி, தென்னாப்பிரிக்கா பந்துவீசவுள்ளது.

Published On - Jun 21,2026 6:35 PM

Follow Us