T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!

Team India Selection for T20 WC 2026: 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ இப்போது இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணி தேர்வு பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறும்.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!

இந்திய டி20 அணி

Updated On: 

19 Dec 2025 14:14 PM

 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa T20 Series) இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதன்பிறகு, இந்திய அணி 2026ம் ஆண்டுதான் சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது, ​​எங்கு அறிவிக்கப்படும் என்பது குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது. அடுத்த 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு நாளை அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறும்.

ALSO READ: U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி எப்போது..? இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதலா?

இந்திய அணி எப்போது, ​​எங்கு அறிவிக்கப்படும்?

2026 டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ இப்போது இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணி தேர்வு பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அணியை அறிவிப்பார்கள்.

நியூசிலாந்துடனான தொடர் எப்போது, ​​அட்டவணை என்ன?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் 2026 டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு நடைபெறும். இந்தத் தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் உட்பட 8 போட்டிகள் நடைபெறும். இந்த இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் 2026 ஜனவரி 11, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வதோதரா, ராஜ்கோட் மற்றும் இந்தூரில் நடைபெறும் போட்டிகளுடன் தொடங்கும்.

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 ஜனவரி 21 முதல் 31 வரை நாக்பூரில் தொடங்கும். 2வது டி20 போட்டி 2026 ஜனவரி 23ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும். 3வது போட்டி 2026 ஜனவரி 25ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும். 4வது டி20 போட்டி 2026 ஜனவரி 28ம் தேதி விசாகப்பட்டினத்திலும், கடைசி டி20 போட்டி 2026 ஜனவரி 31 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெறும்.

ALSO READ: அணிக்கு திரும்பும் பும்ரா, சாம்சன்.. SA அணிக்கு எதிரான இந்திய லெவன் அணி எப்படி இருக்கும்?

2026 டி20 உலகக் கோப்பை எப்போது நடைபெறும்?


2026 டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும். இந்த ஐசிசி போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. எனவே, இந்த போட்டியில் இந்திய அணி வலுவான போட்டியாளராக இருக்கும்.இருப்பினும், போட்டிக்கு முன், இந்திய அணியில் தொடக்க வீரராக கில் களமிறங்குவாரா? ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்குமா? இஷான் கிஷன் மீண்டும் அணியில் இடம் பெறுவாரா உள்ளிட்ட சில கேள்விகள் உள்ளன. அதற்கான பதில்களை அணித் தேர்வில்தான் விடை தெரியும்.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?