IND vs SA 4th T20: ஒரு பந்து கூட வீசவில்லை.. ரத்தான இந்திய போட்டி.. ஆதங்கத்தில் ரசிகர்கள்..!
IND vs SA 4th T20 Match Abandoned: கடுமையான மூடுபனி காரணமாக லக்னோ டி20 சர்வதேசப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், மாசுபாடு மற்றும் மூடுபனியின் அடர்த்தியான போர்வை ஏகானா ஸ்டேடியத்தை சூழ்ந்து, பார்வைத்திறனை வெகுவாகக் குறைத்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், அடர்ந்த மூடுபனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. திட்டமிட்டப்படி நேற்று அதாவது 2025 டிசம்பர் 18ம் தேதி இரவு 7 மணிக்கு இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 (IND vs SA 4th T20) போட்டி தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஏகானா மைதானத்தை அடர்த்தியான மூடுபனி சூழ்ந்ததால் இரவு 9.30 மணி வரை காத்திருந்து போட்டி நடுவர்களின் முடிவின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, குளிர்கால மாதங்களில் வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றும் தெரிந்தும் பிசிசிஐயின் (BCCI) இந்த முடிவு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ALSO READ: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!




டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பி கேட்ட ரசிகர்கள்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய ரசிகர்கள் கோபமாக இருந்தனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர்கள், ”நாங்கள் மூன்றரை மணி நேரம் போட்டியை காண காத்திருக்க வைக்கப்பட்டோம். ஸ்டேடியத்தின் ஆய்வு செய்வதன் பெயரில், நேரத்தை எப்படியாவது கடத்துவதற்காக போட்டியை அரை மணி நேரம் நீட்டித்து நீட்டித்து தள்ளி வைத்தனர்.” என்றார்.
லக்னோவில் காற்றின் தரக் குறியீடு மோசம்:
#WATCH | Lucknow, UP: Cricket fans express their disappointment as IND vs SA 4th T20 match gets abandoned without a ball being bowled, due to fog.
A fan says, “I sold three sacks of wheat and came here to watch the match. I want my money back…” pic.twitter.com/tMXf7Xo02Y
— ANI (@ANI) December 17, 2025
கடுமையான மூடுபனி காரணமாக லக்னோ டி20 சர்வதேசப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், மாசுபாடு மற்றும் மூடுபனியின் அடர்த்தியான போர்வை ஏகானா ஸ்டேடியத்தை சூழ்ந்து, பார்வைத்திறனை வெகுவாகக் குறைத்தது. நேற்று அதாவது 2025 டிசம்பர் 17ம் தேதி லக்னோவில் காற்றின் தரக் குறியீடு 400க்கு மேல் இருந்தது. இது ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐயிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ALSO READ: கடும் பனி.. டாஸ் போட தாமதம்.. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 ரத்து..!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி எப்போது..?
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின்போது பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆய்வுக்காக மைதானத்திற்கு வந்தார். ஆனால் போட்டி அதிகாரிகளுடன் பேசிய பிறகு அவரது உடல் மொழி ஏமாற்றத்தை தெளிவாக பிரதிபலித்தது. ரிசர்வ் டே இல்லாததால், இரு அணிகளும் நாளை அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் விளையாடுவதற்காக சர்வதேச போட்டிக்காக அகமதாபாத்திற்கு பயணிக்கும்.