T20 World Cup 2026: தீம் பாடலை வெளியிடும் அனிருத்.. டி20 உலகக் கோப்பையில் தொடக்க விழா விவரம்!

T20 World Cup Opening Ceremony 2026: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவை இரவு 7 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்தியா தனது இரண்டாவது போட்டியை 2026 பிப்ரவரி 12 ஆம் தேதி நமீபியாவுடனும், மூன்றாவது போட்டியில் 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறுகிறது.

T20 World Cup 2026: தீம் பாடலை வெளியிடும் அனிருத்.. டி20 உலகக் கோப்பையில் தொடக்க விழா விவரம்!

டி20 உலகக் கோப்பை தொடக்க விழா

Published: 

06 Feb 2026 14:39 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையானது (2026 T20 World Cup) 2026 பிப்ரவரி 7ம் தேதியான நாளை முதல் தொடங்கி, இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில், கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை போன்று, 2026 டி20 உலகக் கோப்பையிலும் 20 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றன. இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையின் தொடக்க விழா 2026 பிப்ரவரி 7ம் தேதி, இந்தியா (Indian Cricket Team)-அமெரிக்கா போட்டிக்கு முன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பையின் தொடக்க விழா எப்போது, எங்கு தொடங்குகிறது உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

இலங்கையின் கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு கிளப் (எஸ்எஸ்சி) கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காலை 11 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான தொடக்கப் போட்டியுடன் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 போட்டி 2026  பிப்ரவரி 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இருப்பினும், தொடக்க விழா பிப்ரவரி 7, 2026 அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 5.00 முதல் தொடங்குகிறது. இதன்பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இதுவரை.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் விவரம்!

2026 டி20 உலகக் கோப்பை தொடக்க விழாவில் எந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர்?

டி20 உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் பல பிரபல கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த உள்ளனர் . இதில் தமிழ்நாட்டின் பிரபல தாள வாத்தியக் கலைஞர் சிவமணி, சித்தார் கலைஞர் ரிஷப் சர்மா ஆகியோர் தங்களது மாயாஜாலத்தை காட்ட இருக்கின்றனர். மேலும், பிரபல ராப்பர் பாட்ஷாவும், நோரா ஃபதேஹியும் நடனமாடி மக்களையும் நடனமாட செய்ய இருக்கின்றனர். இதன் பிறகு, அனிருத் ரவிச்சந்தர் டி20 உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ தீம் பாடலான ஃபீல் தி த்ரில்லை பாடி வெளியிடுகிறார். இவை அனைத்தையும் தவிர, 20 அணிகளின் பிரமாண்டமான விளக்கக்காட்சிகள், ஒளி மற்றும் காட்சி நிகழ்ச்சி, இந்திய-இலங்கை கலாச்சாரம் மற்றும் வாணவேடிக்கை காட்சி ஆகியவையும் நடைபெறும்.

ALSO READ: வீரர் முதல் பிராண்ட் தூதர் வரை.. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அட்டவணை:

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவை இரவு 7 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்தியா தனது இரண்டாவது போட்டியை 2026 பிப்ரவரி 12 ஆம் தேதி நமீபியாவுடனும், மூன்றாவது போட்டியில் 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் அணி விளையாட மறுத்துவிட்டதால் இந்தப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியானது 2026 பிப்ரவரி 18ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றும், அதன்பிறகு 4 அணிகள் அரையிறுதியிலும் மோதும். முதல் அரையிறுதி 2026 மார்ச் 4ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி 2026 மார்ச் 5ம் தேதியும் நடைபெறும். கடைசியாக 2026 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது.

 

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்