IND vs NZ Final: பைனலில் இந்தியா நியூசிலாந்தை வெல்ல முடியுமா? புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?

India vs New Zealand Head to Head: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 2023ம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

IND vs NZ Final: பைனலில் இந்தியா நியூசிலாந்தை வெல்ல முடியுமா? புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?

இந்தியா Vs நியூசிலாந்து

Published: 

07 Mar 2026 08:00 AM

 IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். நடப்பு சாம்பியன்களான இந்தியா இந்த உலகக் கோப்பையை வென்றால் தொடர்ச்சியாக இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று உலக சாதனை படைக்கக்கூடும். மறுபுறம், நியூசிலாந்து முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் இலக்கை நோக்கிச் செல்லும். இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை சாம்பியனாக முடியுமா? இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் போட்டியில் எப்படி செயல்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான பைனல்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி?

ஹெட் டூ ஹெட்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 18 முறையும், நியூசிலாந்து 11 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது. 2022 முதல், இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 போட்டிகளில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில், நியூசிலாந்து அணி அதிகபட்சமாக 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளன. அதன்படி, நேருக்கு நேர் போட்டிகளின் சாதனையில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 2023ம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து முன்னிலை:

டி20 உலகக் கோப்பையில் நேருக்கு நேர் போட்டியில் முழுக்க முழுக்க நியூசிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை, இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 உலகக் கோப்பையில் மூன்று முறை மோதியுள்ளன. இதில், மூன்று முறையும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் இந்த 3 வெற்றிகளும் 2007, 2016 மற்றும் 2021 ஆண்டு டி20 உலகக் கோப்பையில் வந்தன.

நரேந்திர மோடி ஸ்டேடியம் இந்திய அணிக்கு ராசியானதா?

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்த அதே மைதானம் இது. வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் மிக முக்கியமானதாக இருக்கும். இங்கு விளையாடிய 14 டி20 சர்வதேச போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒன்பது முறை வென்றுள்ளது.

ALSO READ: இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பைனல்.. களமிறங்கும் அம்பயர் லிஸ்ட் ரெடி!

ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா இதுவரை நியூசிலாந்திற்கு எதிரான எந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி