T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் அதிக ரன்கள்.. அதிக இடங்களை பிடித்து கோலி ஆதிக்கம்!
T20 World Cup knockout Highest Individual Score: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 33 பந்துகளில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபின் ஆலன் பெற்றார். முன்னதாக, இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் வைத்திருந்தார்.

ஃபின் ஆலன் - விராட் கோலி
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதல் அரையிறுதி போட்டியானது நேற்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (NZ vs SA) இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை துரத்தி பைனலுக்கு முன்னேறியது. நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெறும் 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உதவியுடன் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஃபின் ஆலன் விளையாடிய இந்த இன்னிங்ஸில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 303.03 ஆக பதிவு செய்யப்பட்டது. ஃபின் ஆலனின் இன்னிங்ஸ் காரணமாக, நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸின் மூலம், ஆலன் பல்வேறு சாதனைகளை முறியடித்தார். இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பைனலில் கால் வைத்த நியூசிலாந்து.. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட சைஃபர்ட் – ஆலன் ஜோடி!
டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
- 100*(33) – ஃபின் ஆலன் (303 SR)
- 96* (57) – திலகரத்ன தில்ஷன் (168.4 SR)
- 89* (47) – விராட் கோலி (189.4 SR)
- 86 (47) – அலெக்ஸ் ஹேல்ஸ் (182.9 SR)
- 85* (66) – சாமுவேல்ஸ் (128.8 SR)
- 85 (48) – கேன் வில்லியம்சன் (177.1 SR)
- 82* (51) – சிம்மன்ஸ் (160.8 SR)
- 80* (49) – ஜாஸ் பட்லர் (163.6 SR)
- 78 (56) – சாமுவேல்ஸ் (139.3 SR)
- 78 (44) – ராய் (177.3 SR)
- 77* (50) – மிட்செல் மார்ஷ் (154.0 SR)
- 77 (58) – விராட் கோலி (132.8 SR)
- 76 (59) – விராட் கோலி (128.8 SR)
- 75* (41) – கிறிஸ் கெயில் (182.9 SR)
- 75 (54) – கவுதம் கம்பீர் (138.9 SR)
- 72* (47) – டேரில் மிட்செல் (153.2 SR)
- 72* (44) – விராட் கோலி (163.6 SR)
- 70 (30) – யுவராஜ் சிங் (233.3 SR)
ALSO READ: 33 பந்துகளில் சதம் – ஃபின் ஆலன் உலக சாதனை – இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்
டி20 உலகக் கோப்பையில் வேகமான சதம்:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 33 பந்துகளில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபின் ஆலன் பெற்றார். முன்னதாக, இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் வைத்திருந்தார். கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல் 47 பந்துகளில் சதம் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை நாக் அவுட்களில் முதல் சதம்:
டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஃபின் ஆலன் பெற்றார். நாக் அவுட் கட்டத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான முந்தைய சாதனை இலங்கை வீரர் திலகரத்ன தில்ஷன் வசம் இருந்தது. 2009 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இலங்கை தொடக்க வீரர் தில்ஷன் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார்.