Asia Cup 2025: சுப்மன் கில்லின் இடத்துக்கு ஆபத்து ? வெளியான தகவல்!
Shubman Gill Asia Cup Blow: ஆசிய கோப்பை போட்டிகள் வருகிற செப்டம்பர் 9, 2025 முதல் துபாயில் துவங்கவிருக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிய கோப்பை (Asia Cup) போட்டிகள் செப்டம்பர், 2025 அன்று முதல் துபாயில் துவங்கவிருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்திய அணி செப்டம்பர் 10, 2025 அன்று தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுப்மன் கில் (Shubman Gill)இந்திய அணி இடம் பெறுவது சந்தேம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டைம் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தின் அடிப்படையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுப்மன் கில் அணியில் இடத்துக்கு ஆபத்து?
ஆசிய கோப்பை போட்டிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் அதற்கான வீரர்கள் தேர்வில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அணி தேர்வகர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்று்ம் அபிஷேக் சர்மா ஆகியோரின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்தாகவும் இதனால் சுப்மன் கில்லின் இடம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
இதையும் படிக்க : ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!




இது த1டர்பாக இந்திய தேர்வகர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை அதிகம் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால் கில்லின் இடம் கேள்விக்குறியாகவுள்ளது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயா ஐயர் ஆகியோரும் டி20 அணிக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வாலுக்கு தேர்வகர்கள் ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க : காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார் யாதவ்.. ஆசியக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டன் யார்?
ரவி ஷாஸ்திரியின் பாராட்டு
இந்த நிலையில் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் சுப்மன் கில் இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடும் திறமை படைத்தவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் அவருக்கு ஐசிசியின் ஜூலை, 2025ன் சிறந்த விரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய கில் 754 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 4 தங்களும் அடங்கும். இதன் மூலம் தொடர் நாயகன் விருதும் அவருக்கு கிடைத்தது.
முன்னதாக கடந்த ஜனவரி, செப்டம்பர், 2023 மற்றும் பிப்ரவரி, 2025 ஆகிய 3 முறை ஐசிசியின் விருதைப் பெற்றிருந்தார். இந்த விருதை 4வது முறையாக அவர் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ஸ்கை ஸ்போர்ட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் சுப்மன் கில்லின் வயது 25 தான். இதனால் அவர் அனுபவங்களால் இன்னும் மேம்படுவார். அவர் மிகவும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார். அவரது பேட்டிங் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. அவர் நீண்ட இன்னிங்ஸ் ஆடக் கூடியவர் எனப் பாராட்டினார்.