Rohit Sharma: விநாயகர் வழிபாட்டின்போது ரசிகர்கள் செய்த செயல்.. கடுப்பாகி கையெடுத்து கும்பிட்ட ரோஹித் சர்மா!

Rohit Sharma Requests Fans: இந்திய ஒருநாள் அணித் தலைவர் ரோஹித் சர்மா, மும்பையில் விநாயகர் சிலையை வழிபட்டபோது ரசிகர்கள் "மும்பை கா ராஜா ரோஹித் சர்மா" எனக் கோஷமிட்டதால் அதிருப்தி அடைந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர்கள் கோஷமிடுவதை நிறுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Rohit Sharma: விநாயகர் வழிபாட்டின்போது ரசிகர்கள் செய்த செயல்.. கடுப்பாகி கையெடுத்து கும்பிட்ட ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

Published: 

07 Sep 2025 08:30 AM

 IST

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் மும்பையின் வோர்லியில் உள்ள விநாயகர் சிலையை (Ganpati Visarjan) வழிபட சென்றனர். அங்கு, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை (Rohit Sharma) காண கட்டுக்கடுங்காமல் கூடியது. அந்த நேரத்தில், அவரது ரசிகர்கள் விநாயகர் சிலையின் முன்பு, “மும்பை கா ராஜா ரோஹித் சர்மா” என்று கோஷமிட தொடங்கினர். விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. இதனால், கடுமான ரோஹித் சர்மா ஒரு செயலை செய்து வந்தார். அந்த செயலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரோஹித் சர்மா:


டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக இருந்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகு, ரோஹித் சர்மா தற்போது மும்பையில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். இந்தநிலையில், சமீபத்தில் ரோஹித் சர்மா மும்பையில் நடந்த கணபதி பூஜையின் போது விநாயகர் அருளைப் பெறுவதற்காக, மும்பையில் உள்ள லால் ராஜா விநாயகர் பந்தலுக்கு வந்திருந்தார். அப்போது, ரோஹித் சர்மாவை கண்ட அவரது ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோஹித் சர்மா என கோஷமிட்டனர். இதனால், கடும் அதிருப்தி அடைந்தார். தற்போது, மும்பையில் நடந்த கணபதி கொண்டாட்டங்களின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!

அந்த வீடியோவில், ரோஹித் கூப்பிய கைகளுடன் ரசிகர்களிடம் “மும்பை கா ராஜா ரோஹித் சர்மா” என்று கோஷமிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். வழக்கமாக, ரோஹித்தின் ரசிகர்கள் அவரது நட்சத்திர அந்தஸ்தைப் பாராட்ட இதுபோன்ற கோஷங்களை எழுப்புவார்கள். ஆனால், சமீபத்திய வைரலான வீடியோவில், ரோஹித் அவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். முதலில் ஒரு கையால் சைகை செய்து, பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி கேட்டு கொண்டார்.

ALSO READ: ஆசியக் கோப்பைக்காக மாஸ் லுக்.. புது ஹேர் ஸ்டைலில் உலா வரும் ஹர்திக் பாண்ட்யா!

சர்வதேச போட்டிக்கு திரும்பும் ரோஹித் சர்மா:

ரோஹித் விரைவில் ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். இந்திய அணி அடுத்த மாதம் அதாவது 2025 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 19 ம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கும். அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் வருகின்ற 2025 அக்டோபர் 23ம் தேதி அடிலெய்டிலும், வருகின்ற 2025 அக்டோபர் 25 ம் தேதி சிட்னியிலும் நடைபெறும்.