Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்த ரோஹித் சர்மா!

Rohit Sharma 18 Years International Cricket: ரோஹித் சர்மா 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்களிப்பளித்துள்ளார். 2007ல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் தொடங்கிய அவரது பயணம், இன்று 2 ஐசிசி கோப்பைகளையும், டெஸ்ட், டி20 ஓய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. அவர் இன்ஸ்டாகிராமில் தனது முதல் டெஸ்ட் ஹெல்மெட்டின் படத்தை பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார்.

Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மாImage Source: Instagram and PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Jun 2025 14:52 PM

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான் பேட்ஸ்மேனும், இந்திய அணிக்கு 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோஹித் சர்மா (Rohit Sharma), சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதாவது, ரோஹித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாடினார். அது ஒரு ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, அதே ஆண்டு தனது டி20 அறிமுகத்தையும், பின்னர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் (West Indies Cricket) அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். அதன்படி, சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து, ரோஹித் சர்மா இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் சுவாரஸ்யமான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:

38 வயதான ரோஹித் சர்மா கடந்த 2025 மே மாதத்தின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் பிறகு சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன்படி, ரோஹித் சர்மா இந்திய அணிக்காக தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். 2007ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கிய ரோஹித் சர்மாவின் பயணம் இன்றுடன் 18 ஆண்டுகளை கடந்துள்ளது இருப்பினும், ரோஹித் சர்மா தனது முதல் சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா மகிழ்ச்சி:

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து, ரோஹித் சர்மா தனது முதல் டெஸ்டில் பெற்ற ஹெல்மெட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனுடன், “நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்ற தலைப்பில் எழுதினார். இதனுடன், அவர் ஒரு நீல நிற ஹார்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 40.57 சராசரியில் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 4301 ரன்கள் எடுத்துள்ளார், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரை  273 போட்டிகளில் விளையாடி 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11168 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 264 ஆகும். இது உலகிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

அதேபோல், ரோஹித் சர்மா இதுவரை 159 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 32 அரைசதங்களுடன் 4231 ரன்கள் எடுத்துள்ளார்.