IndvsZim : மீண்டும் இந்திய அணியில் இணையும் ரிங்கு சிங்? இந்திய பயிற்சியாளர் தகவல்
T20 World Cup 2026 : தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்க ரிங்கு சிங் நொய்டா சென்றுள்ளார். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்கு பிறகு வருகிற பிப்ரவரி 26, 2026 அன்று இந்திய அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது தந்தையின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று வீடு திரும்பினார். இதனால் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிங்கு சிங்கின் தந்தைக்கு உடல்நலக்குறைவு
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கஞ்சந்த் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது தந்தையைக் காண ரிங்கு சிங் கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று நொய்டா கிளம்பி சென்றார். இதனால் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்ப அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணியின் பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதையும் படிக்க : ஜிம்பாப்வே போட்டிக்காக இந்திய அணியில் பெரிய மாற்றம்? சாம்சன் இடம்பெற வாய்ப்பு




மீண்டும் இணையும் ரிங்கு சிங்
இந்த நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், ரிங்கு சிங் பிப்ரவரி 25, 2026 அன்று மாலை அவர் சென்னை திரும்புவார். இதனால் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. உலகக்கோப்பை 2026ல் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ரிங்கு சிங் இடம் பெற்றிருந்தார் ரிங்கு சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இதுவரை 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவரது இடம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பேட்டிங் வரிசையில் இந்திய அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : டி20 உலகக்கோப்பை 2026: 11 முறை டக் அவுட் – மோசமான சாதனை செய்த இந்தியா
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர், இந்திய அணியில் அக்சர் படேலை மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் வாஷிங்டன் சுந்தரை நீக்காமல் அவரையும் இடம் பெற செய்வது இந்திய அணியின் பவுலிங்கை வலுவகாக்க உதவும் என்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் ரிங்கு சிங் மீண்டும் அணியில் இணைவது இந்திய அணிக்கு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.