RCB Vs PBKS Head to Head Records: ஐபிஎல் இறுதிப்போட்டியில் களம் காணும் ஆர்சிபி vs பிபிகேஎஸ்.. எந்த அணி இதுவரை அதிக ஆதிக்கம்..?

IPL 2025 Royal Challengers Bengaluru vs Punjab Kings Match stats: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 36 முறை மோதியுள்ளன, இதில் ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் மூன்று போட்டிகள் நடந்தன, RCB இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்பது சுவாரஸ்யமாக உள்ளது.

RCB Vs PBKS Head to Head Records: ஐபிஎல் இறுதிப்போட்டியில் களம் காணும் ஆர்சிபி vs பிபிகேஎஸ்.. எந்த அணி இதுவரை அதிக ஆதிக்கம்..?

ரஜத் படிதார் Vs ஷ்ரேயாஸ் ஐயர்

Published: 

03 Jun 2025 08:00 AM

இந்தியன் பிரிமீயர் லீக்கின் 18வது சீசனின் இறுதிப்போட்டியில் (IPL 2025 Final) இன்று அதாவது 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாததால், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஹெட் டூ ஹெட்:

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல்லில் இதுவரை சமமான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மொத்தம் 36 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 18 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2025 சீசனின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் 37வது முறையாக மோதவுள்ளன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி முன்னிலை வகிக்கும்.

ஐபிஎல் 2025 சீசனில் நேருக்குநேர்:

ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நடந்துள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 2025 ஏப்ரல் 18ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு, பஞ்சாப் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் பஞ்சாப் – பெங்களூரு இடையிலான 2வது போட்டியானது 2025 ஏப்ரல் 20ம் தேதி பஞ்சாபின் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு, பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி அவுட்டாகாமல் 73 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருந்து வென்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி குவாலிஃபையர் 1 போட்டியாகும். இது மொஹாலியில் உள்ள முல்லன்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 101 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு பெங்களூரு அணி 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல்2025 இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல் போட்டி வெற்றி யாருக்கு அமைந்தது..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (அப்போதைய கிங்ஸ் XI பஞ்சாப் ) அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 2005 மே 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.