டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடன் விளையாட மறுத்த பாகிஸ்தான் – விவரம் இதோ

T20 World Cup 2026 : வருகிற பிப்ரவரி 7, 2026 அன்று இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடன் விளையாட மறுத்த பாகிஸ்தான் - விவரம் இதோ

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

Published: 

01 Feb 2026 21:47 PM

 IST

வருகிற பிப்ரவரி 7, 2026  அன்று முதல் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை 2026 நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகவுள்ளது.  இந்த போட்டியில் தங்கள் அணி பங்கேற்கும் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் (Pakistan) அரசு, பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான  போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த முடிவின் பின்னணியில் அரசியல் காரணங்களும் ஐசிசிக்கு எதிரான செயல்பாடும் தான் காரணம் என கூறப்படுகிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு பிப்ரவரி 1, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். ஆனால் பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது என அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார்? முதலிடத்தை மிஸ் செய்த தோனி, ரோஹித்!

இதற்கு முக்கிய காரணம் ஐசிசி எடுத்த சமீபத்திய முடிவு. பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் தங்கள் போட்டிகளை இந்தியாவில் விளையாட முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால், ஐ.சி.சி அவர்களை போட்டியில் இருந்து நீக்கி ஸ்காட்லாந்தை சேர்த்தது. இந்த விஷயத்தில் வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட மறுத்தால் என்ன நடக்கும்?

இந்த முடிவு பாகிஸ்தானுக்கு குறிப்பிட்ட பாயிண்ட்ஸ்களை இழக்கும். ஐசிசி விதிகளின்படி, ஒரு அணி ஒரு போட்டியில் விளையாட மறுத்தால், அந்த போட்டி தோல்வியாக கருதப்படுகிறது. இதனால், இந்தியா எந்த முயற்சியும் இல்லாமல் இரண்டு பாயிண்ட்ஸ்களைப் பெறும். இருப்பினும், இங்கே உண்மையான இழப்பு பாயிண்ட்ஸ்களை விட பொருளாதார இழப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருவாயை பெறும் ஒரு போட்டியாகும்.   ஸ்பான்சர்கள் இந்த ஒரு போட்டிக்காக கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்வார்கள். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசிக்கு சுமார் 38 மில்லியன் டாலர்கள்  இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Team India T20 World cup Victory: எம்.எஸ்.தோனி முதல் ரோஹித் சர்மா வரை.. 2 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற கதை!

மறுபுறம், இந்தியாவுடன் விளையாட மறுப்பதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாகிஸ்தானில் நடைபெறும் எதிர்காலப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று விளையாட்டு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ஐ.சி.சி கடைசி நிமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தான் அரசை சமாதானப்படுத்துமா? அல்லது இந்த முறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை காண முடியாமல் போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!