AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jasprit Bumrah: இங்கிலாந்து மண்ணில் இன்னும் 13 விக்கெட்டுகள் தேவை.. புதிய சாதனை படைக்கப்போகும் பும்ரா..!

India vs England Test Series: இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 50 விக்கெட் சாதனையை நோக்கி செல்கிறார். இதுவரை இங்கிலாந்தில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்னும் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினால், இங்கிலாந்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். இஷாந்த் சர்மா (48 விக்கெட்டுகள்) மற்றும் கபில் தேவ் (43 விக்கெட்டுகள்) ஆகியோரின் சாதனைகளை பும்ரா முறியடிக்க உள்ளார்.

Jasprit Bumrah: இங்கிலாந்து மண்ணில் இன்னும் 13 விக்கெட்டுகள் தேவை.. புதிய சாதனை படைக்கப்போகும் பும்ரா..!
ஜஸ்பிரித் பும்ராImage Source: PTI and GETTY
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2025 23:37 PM IST

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் (India vs England Test Series) மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஓய்வுக்கு பிறகு, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி எப்படி செயல்படும் என்பதை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் விரும்புகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா முடிந்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார். அந்த வகையில், இங்கிலாந்து தொடர் தொடங்கிய பிறகுதான் பும்ரா எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பது தெரியவரும். ஆனால் இந்த நேரத்தில் பும்ரா வெறும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கூட, தாந்து பெயரில் ஒரு சிறப்பு சாதனை பதிவு செய்வார்.

இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் யார்..?

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 13 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. பும்ரா இந்த சாதனையை எட்டினால், இங்கிலாந்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை எந்த இந்திய பந்து வீச்சாளரும் இந்த சாதனையை எட்டவில்லை, ஆனால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரை, இங்கிலாந்தில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, அதில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மாவுக்குப் பிறகு, இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் படைத்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் 13 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா இதுவரை இங்கிலாந்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 37 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கேப்டனுக்கு பந்து வீசிய பும்ரா:

ஜஸ்பிரித் பும்ரா இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவின் 85 விக்கெட்டுகளை முறியடித்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக மாற, இந்தத் தொடரில் அவருக்கு குறைந்தது 26 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது பும்ரா 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுபோன்ற சூழ்நிலையில், டெஸ்ட் தொடரிலும் பும்ரா அதே செயல்திறனை மீண்டும் செய்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Follow Us