IPL 2026: பாட் கம்மின்ஸ் டவுட்.. இஷான் கிஷனை கேப்டனாக நியமித்த SRH!

Ishan Kishan Captain: இஷான் கிஷனின் தற்போதைய பார்ம் காரணமாகவே கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தது. இஷான் கிஷனுக்கு ஐபிஎல்லில் கேப்டன்சி செய்த அனுபவம் கிடையாது.

IPL 2026: பாட் கம்மின்ஸ் டவுட்.. இஷான் கிஷனை கேப்டனாக நியமித்த SRH!

இஷான் கிஷன்

Published: 

18 Mar 2026 20:24 PM

 IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி பல நாட்களாக நீடித்து வந்தது. அதற்கு காரணமாக, பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்புவாரா என்ற கேள்விதான். அந்தவகையில் தற்போது, ​​பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2026 சீசனின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. எனவே, முதல் சில போட்டிகளுக்கு ஒரு மாற்று வீரரைக் கண்டுபிடிப்பதைத் தவிர சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வேறு வழியில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இஷான் கிஷன் (Ishan Kishan) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச் 18ம் தேதியான இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இஷான் கிஷனின் பெயரை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே, கடந்த சில நாட்களாக நடந்து வந்த விவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன.

ALSO READ: இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறாரா ரோஹித் சர்மா? மும்பை பயிற்சியாளர் விளக்கம்!

இஷான் கிஷன் கேப்டனாக நியமனம்:

ஐபிஎல் 2026 தொடருக்கு முன்பு, பாட் கம்மின்ஸ் காயமடைந்துள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சமூக வலைதளங்களில் பதிவிட்டது. எனவே, அவரால் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது. கம்மின்ஸ் அணிக்குத் திரும்பும் வரை இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்துவார் என்றும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இந்தப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடைபெறும். டாஸின்போது இஷான் கிஷன் மற்றும் ரஜத் பாடிதார் ஆகியோர் களத்தில் இருப்பார்கள்.

இஷான் கிஷனின் தற்போதைய பார்ம் காரணமாகவே கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தது. இஷான் கிஷனுக்கு ஐபிஎல்லில் கேப்டன்சி செய்த அனுபவம் கிடையாது. இருப்பினும், உள்ளூர் கிரிக்கெட்டில் சையத் முஷ்டாக் அலி, அண்டர் 19 உலகக் கோப்பை போன்ற அணிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். எனவே, தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரிடமிருந்து அதேபோன்ற ஒரு செயல்திறனை எதிர்பார்க்கிறது.

ALSO READ: தோனிக்கு ஃபேர்வெல்? முன்னாள் வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பாட் கம்மின்ஸ், கடந்த 2 சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். மேலும், 2026 டி20 உலகக் கோப்பையையும் தவறவிட்டார். தற்போது, ​​ஐபிஎல் தொடரின் நடுவில் பாட் கம்மின்ஸ் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், இஷான் கிஷன் ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் தலைமை தாங்க வேண்டியிருக்கும்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்