IPL 2026: ஹைதராபாத்தா அல்லது டெல்லியா..? இன்று யார் வெற்றி பெறுவார்கள்? பிட்ச் ரிப்போர்ட்!
SRH vs DC Head to Head: ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 31வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தப் போட்டியானது இன்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முந்தைய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்த பார்மில் உள்ளது. இந்த உத்வேகத்தை இன்றும் தொடர ஹைதராபாத் அணி முனையும். டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணியும் தனது முந்தைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், தொடர்ச்சியாக 2 தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் விவரங்களான, பிளேயிங் லெவன் வீரர்கள், பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை, மற்றும் நேருக்கு நேர் புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ALSO READ: இது என் பிரச்சனை இல்லை.. பும்ரா குறித்த கேள்விக்கு ஹர்திக் கொடுத்த பதில்!
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
ராஜீவ் காந்தி மைதானத்தின் பிட்ச் கருப்பு மண் வகையைச் சேர்ந்தது, இது அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டிகளுக்கு உகந்தது. இது பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் அதிக பவுன்ஸை வழங்குவதோடு, பந்தும் பேட்டிற்கு நன்றாக வருகிறது. ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருப்பதால், பவர்பிளே பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக அமைகிறது. முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக உதவி கிடைக்கும், எனவே டாஸ் வெல்லும் கேப்டன்கள் பெரும்பாலும் சேஸிங்கையே தேர்வு செய்வார்கள்.
ஹைதராபாத்தில் வானிலை எப்படி இருக்கும்?
2026 ஏப்ரல் 21ம் தேதியான இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஹைதராபாத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, இருப்பினும் அதற்கான சாத்தியம் 5 சதவீதம் மட்டுமே. போட்டியை கைவிடும் அளவிற்கு மழையின் தீவிரம் இல்லை. முதல் இன்னிங்ஸின் போது வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 29-30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ALSO READ: வேகம் காட்டிய மும்பை.. சோகத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல் லேட்டஸ்ட் இதோ!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் XI:
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), ஷிவாங் குமார், பிரபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன், இஷான் மலிங்கா.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உத்தேச ஆடும் XI:
பதும் நிசாங்கா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), டேவிட் மில்லர், அகிப் நபி, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்.



