IPL 2026: இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம்.. பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன்கள் கோரிக்கை!

Impact Player Rule: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்த விதியை வெளிப்படையாக எதிர்த்துள்ளார். ஊடகங்களுடனான ஒரு சந்திப்பில், இந்த விதி ஆல்-ரவுண்டர்களின் பங்களிப்பை நீக்குவதால் தனக்கு இது பிடிக்கவில்லை என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறினார்.

IPL 2026: இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம்.. பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன்கள் கோரிக்கை!

இம்பாக்ட் பிளேயர் விதி

Published: 

26 Mar 2026 17:24 PM

 IST

ஐபிஎல் 19வது சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியுடன் பிராமாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, நேற்று அதாவது 2026 மார்ச் 25ம் தேதி ஹர்திக் பாண்ட்யா, ருதுராஜ் கெய்க்வாட் உட்பட 10 அணிகளின் கேப்டன்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, ​​சில ஐபிஎல் விதிகள் குறித்தும் கேப்டன்களிடம் விளக்கப்பட்டது. அப்போது, சில கேப்டன்கள் ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் விதிக்கு விருப்பம் இல்லையென்றும், அது குறித்து இந்தக் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2023-ல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களுக்கு உள்ளாகி வரும் ‘இம்பாக்ட் பிளேயர் விதிக்கு’ (Impact Player Rule) பெரும்பாலான ஐபிஎல் கேப்டன்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிசிசிஐ இந்த விதியை 2027 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐபிஎல் 2026 தொடக்க விழா நடைபெறாதா..? பிசிசிஐ செயலாளர் விளக்கம்!

ஐபிஎல் 2026 கேப்டன்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

மும்பையில் நடைபெற்ற 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான கேப்டன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, இம்பாக்ட் பிளேயர் விதிக்கு தங்கள் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினர் என்று ஐபிஎல் வட்டாரம் தெரிவித்தது. இந்த விதி 2027-ஆம் ஆண்டுக்குப் பிறகே மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், எனவே இது இந்த ஐபிஎல் 2026 சீசன் மற்றும் அடுத்த ஐபிஎல் 2027 சீசன் முழுவதும் நடைமுறையில் இருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அக்சர் படேல் வெளிப்படையாக எதிர்ப்பு:

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்த விதியை வெளிப்படையாக எதிர்த்துள்ளார். ஊடகங்களுடனான ஒரு சந்திப்பில், இந்த விதி ஆல்-ரவுண்டர்களின் பங்களிப்பை நீக்குவதால் தனக்கு இது பிடிக்கவில்லை என்று அக்சர் கூறினார். முன்னதாக, இந்திய கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களின் பற்றாக்குறைக்கு இது வழிவகுக்கும் என்பதால், இம்பாக்ட் பிளேயர்கள் என்ற கருத்தாக்கத்துடன் தனக்கு உடன்பாடில்லை என்று ரோஹித் 2024-ல் கூறினார். இம்பாக்ட் பிளேயர் விதி, அணிக்கு ஆல்-ரவுண்டர்களைத் தேர்ந்தெடுப்பதை கடினமாக்கியுள்ளது என்று கூறி, ஹர்திக் பாண்டியாவும் இதற்கு எதிராகக் குரல் எழுப்பினார். பல வெளிநாட்டு வீரர்களும் இந்த விதிக்கு எதிராகக் குரல் எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் இவர்களா? கேப்டன் ருதுராஜ் ஓபன் டாக்!

விதிகள் குறித்து விளக்கம்:

ஐபிஎல் 2026 சீசன் முதல்  இரண்டாவது இன்னிங்ஸில் பொதுவாக அதிக பனிப்பொழிவு இருக்கும், எனவே தற்போதைய விதி நடைமுறையில் இருக்கும். எனவே, 10வது ஓவருக்கு பிறகு பந்து மாற்றுவது குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தின் போது, ​​பயிற்சி வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களையும் ஐபிஎல் அதிகாரிகள் கேப்டன்களுக்கு வழங்கினர். பிசிசிஐ-யின் புதிய விதிகளின்படி, போட்டி நாட்களில் எந்தப் பயிற்சியும் அனுமதிக்கப்படாது. மேலும், ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டால், மற்ற அணி அந்த பிட்ச்களை பயிற்சிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்தனர்.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..